MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Vishwanath and Sons Review : சூர்யாவின் ஃபீல் குட் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ

Vishwanath and Sons Review : சூர்யாவின் ஃபீல் குட் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ

Vishwanath and Sons Twitter Review : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Aug 14 2026, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vishwanath and Sons Twitter Review
Image Credit : X

Vishwanath and Sons Twitter Review

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரிலீஸ்
Image Credit : Asianet News

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரிலீஸ்

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு இயக்குநர் வெங்கி அட்லூரியே கதை எழுதியுள்ளார். சூர்யா மற்றும் மமிதா பைஜூவைத் தவிர, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் திரைப்பயணத்தில் இது 46-வது திரைப்படமாக அமைந்துள்ளது. கருப்பு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதனை இங்கே பார்க்கலாம்.

Related Articles

Related image1
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Related image2
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீமேக் படமா? வெடித்த புது சர்ச்சை - உண்மை என்ன?
34
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ட்விட்டர் விமர்சனம்
Image Credit : Asianet News

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ட்விட்டர் விமர்சனம்

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் படம், போகப் போக படிப்படியாக வேகம் பிடிக்கிறது. கதையின் முக்கிய அம்சத்திலிருந்து விலகாமல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை சரியான அளவில் கலந்து முதல் பாதியை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். இதனால் படம் அடுத்த கட்டத்தில் இன்னும் சிறப்பாக செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் அந்த எதிர்பார்ப்பு சற்று ஏமாற்றமளிக்கிறது. தேவையில்லாத சில கிளைக்கதைகள் மற்றும் அதிகப்படியான சென்டிமென்ட் காட்சிகள் கதையின் வேகத்தை பாதிக்கின்றன. முதல் பாதியில் இருந்த நகைச்சுவையும் இரண்டாம் பாதியில் குறைந்து விடுகிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் பகுதி ஓரளவுக்கு சிறப்பாக கையாளப்பட்டிருப்பதால் படம் முடிவில் திருப்தியை ஏற்படுத்துகிறது.

சூர்யா, மமிதா பைஜூ மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக, இயக்குநர் வெங்கி அட்லூரியின் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. பாடல்களும் ஓரளவுக்கு படத்திற்கு பொருத்தமாக இருக்கின்றன.

முக்கியமாக, இரண்டாம் பாதிக்கான திரைக்கதை இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால் படம் வேறு லெவலுக்கு சென்றிருக்கும். இருந்தாலும், பெரிய சிக்கல்கள் இல்லாமல் குடும்பத்துடன் ஒருமுறை தாராளமாக ரசிக்கக்கூடிய படமாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

#VishwanathAndSons A Watchable, Clean Family Entertainer With a Good 1st Half but a Weak 2nd Half!

After a slow start, the first half feels refreshing and stays focused on the core plot with a good mix of fun and emotion. Just when you expect that flow to continue, the second…

— Venky Reviews (@venkyreviews) August 14, 2026

44
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எக்ஸ் தள விமர்சனம்
Image Credit : Asianet News

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எக்ஸ் தள விமர்சனம்

கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் ஆரம்பிக்கும் விதம் கொஞ்சம் மெதுவாகவும் சில இடங்களில் செயற்கையாகவும் இருக்கிறது. ஆனால் கதை மெல்ல வேகம் பிடித்த பிறகு, முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்து, இடைவேளை வரை நம்மை ஈர்த்துச் செல்கிறது. சூர்யாவின் இயல்பான நடிப்பும், மமிதா பைஜூ – ராதிகா சரத்குமார் இணையும் காட்சிகளில் இருக்கும் கலகலப்பும் படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக மருத்துவமனை காட்சிகள், ட்ரிப் தொடர்பான காமெடி பகுதிகள், ஹோட்டலில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஆகியவை ரசிக்க வைக்கும் முக்கியமான தருணங்களாக உள்ளன.

இடைவேளைக்கு முன்பு வரும் ரெட்ரோ பாடல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் பாதியைப் பொறுத்தவரை, படம் பெரிய சிக்கல்கள் இல்லாமல் எளிமையாகவும் அழகாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு சற்று குறைந்து, சராசரியான அனுபவத்தை மட்டுமே தருகிறது. இருப்பினும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய அளவுக்கு படத்தில் நல்ல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

#VishwanathAndSons - VATCHABLE ONES!

Good 1st Hlf & Avg 2nd Half.

OKayish Feel Good Family Entertainer!

— Christopher Kanagaraj (@Chrissuccess) August 14, 2026

#VishwanathAndSons - First Half 👍

Nice Plot; Started Slow & Cringe, then picks up & Engaging till Interval. Charming Suriya, Mami - Radhika Combo is Fun. Hospital Seq, Trip Comedy, Hotel Fight r Highlights. Interval Retro Track Pakka. So far, Its Simple & Beautiful!!

— Christopher Kanagaraj (@Chrissuccess) August 13, 2026

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ
Recommended image2
Vadhandhi 2 Review : முதல் சீசனை போல் அடிபொலியாக இருந்ததா வதந்தி 2 வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ
Recommended image3
GDN Review : ஜிடி நாயுடுவாக மாதவன் கலக்கினாரா? சொதப்பினாரா? ஜிடிஎன் விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Recommended image2
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீமேக் படமா? வெடித்த புது சர்ச்சை - உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved