Asianet News TamilAsianet News Tamil

சேமிப்பு கிடங்குகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் - ராதாகிருஷ்ணன் பேட்டி

சேமிப்புக் கிடங்குகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாத்து, நஷ்டம் இல்லாமல் சேமிப்புக் கிடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
 

மதுரையில் பெருங்குடி வில்லாபுரம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் கூட்டுறவுத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள், வாணிப கிடங்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு சிவில் சப்ளை தான் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறது. எனவே ஒப்பந்த தொழிலாளர்கள் நலனை பாதுகாப்பதற்கு கழிப்பறை வசதிகளை செய்து தர ரூ. 20 லட்சம் மதிப்பிட்டில் பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள கட்டிடங்களுக்கு 10 ஆண்டுகளாக வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. அதனால் தற்போது தானிய கிடங்குகளை புதுபிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க:மக்களே அலர்ட் !! தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சேமிப்பு கிடங்குகளை புதுப்பிக்க என்ன தொழில்நுட்பம் தேவை என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். நெல் மூடைகளை பாதுகாப்பாக சேமிப்பது குறித்தும் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை வீணாகாமல் கொண்டு செல்வது குறித்தும் திட்டமிட்டு வருவதாக கூறினார்.

அதே போல் இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயமான சலுகைகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சுமை தூக்கும் ஒப்பந்த தொழிலாளி நாள் ஒன்றுக்கு 40லிருந்து 50 மூடைகளை தினசரி சுமக்கிறார். அவர்கள் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும் படிக்க:கைதாகிறாரா ஓ.பி. ரவிந்திரநாத்..? சிறுத்தை மர்ம மரணத்தில் திடீர் சிக்கல்

Video Top Stories