MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட தமிழ் பட நடிகை... தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதமும் சிக்கியது

தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட தமிழ் பட நடிகை... தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதமும் சிக்கியது

வாய்தா பட நடிகை தீபிகா கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 02 2022, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாய்தா படத்தில் நடித்த இளம் நடிகை தீபிகா என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

24

மும்பையில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தவர் அகான்ஷா மோகன். எம்பிஏ படித்துள்ள இவர், மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடல் அழகியாக வலம் வந்துகொண்டிருந்தார். இதையடுத்து படிப்படியாக படங்களிலும் நடிக்கத்தொடங்கினார். கடந்த மாதம் வெளியான சியா என்கிற இந்தி படத்தில் இவர் ஹீரோயினாக நடித்தார். அதுமட்டுமின்றி 9 திருடர்கள் என்கிற தமிழ் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அடுத்த படத்தில் சோழ மன்னராக அவதாரம் எடுக்க உள்ள தனுஷ்... பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

34

நடிகை அகான்ஷா மோகன், மும்பையின் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 2 நாட்களுக்கு ரூம் போட்டு தங்கி இருந்தார். இரண்டு நாட்களாக அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர். மாற்று சாவியை பயன்படுத்தி ரூமை திறந்து பார்த்தபோது நடிகை அகான்ஷா மோகன், தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார்.

44

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறக்கும் முன் அவர் எழுதிய தற்கொலை கடிதமும் சிக்கியது. அதில் ‘என்னை மன்னித்துவிடுங்கள். நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி தேவை. எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் தொல்லை செய்யாதீங்க’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... இரண்டே நாளில் ரூ.150 கோடியை தாண்டிய வசூல்.... பாக்ஸ் ஆபிஸில் பண மழை பொழியும் பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
படிப்பும், உடம்பும் தான் முக்கியம்.! போய் படிங்கப்பா.!சூப்பர் ஸ்டார் ரஜினி அடவைஸ்.!
Recommended image2
ஒன்றரை கோடி ரூபாய் ஆஃபரை புறம் தள்ளிய ராஜ்கிரன்.! விவசாயிகளுக்காக கோடீஸ்வர வாய்ப்பை தூக்கி வீசிய கிராமத்து ஹீரோ!
Recommended image3
அல்லு அர்ஜுன் படத்துக்காக டைட்டிலை காப்பியடித்த அட்லீ... ராக்கா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved