- Home
- Cinema
- துருவ் விக்ரம் உடன் காதல் தோல்வியா? நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவால் கன்பியூஸ் ஆன ரசிகர்கள்..!
துருவ் விக்ரம் உடன் காதல் தோல்வியா? நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவால் கன்பியூஸ் ஆன ரசிகர்கள்..!
Anupama Parameswaran : நடிகை அனுபமா பரமேஸ்வரன், இனி யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை என தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் கன்பியூஸ் ஆகி உள்ளனர்.

Anupama Parameswaran Cryptic Post
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிராகன்' மற்றும் 'பைசன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரம் உடன் நடித்திருந்தார்.
காதல் கிசுகிசு
இவர் பைசன் படத்தில் நடித்தபோது துருவ் விக்ரமுக்கும், அனுபமாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இணையத்திலும் இவர்கள் இருவரும் போடும் சூசக பதிவுகள் இவர்களின் காதல் வதந்திக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்தன. இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டுள்ள பதிவு புயலை கிளப்பி உள்ளது.
அனுபமாவின் பதிவு
அவர் தனது பதிவில், வாழ்க்கையில் முன்னேற சில தேவையற்ற தடைகளை தாண்டிச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இனிமேல் தனது வாழ்க்கை மற்றும் முடிவுகளை தானே சுதந்திரமாக தீர்மானிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தைகள், புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் மனநிலையை வெளிப்படுத்துவதாக பலரும் கருதுகின்றனர். அதேபோல் மற்றொரு பதிவில், இனி யாருடைய அனுமதிக்காகவும், பாடல் செலக்ஷனுக்காகவும், சிலரின் கேப்ஷனுக்காகவும் காத்திருக்க தேவையில்லை என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானதும், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகத் தொடங்கின. சிலர் இது அவரது காதல் முறிவைக் குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லவ் பிரேக் அப்-பா?
கடந்த சில மாதங்களாக, நடிகர் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் குறித்து சமூக வலைதளங்களில் காதல் தொடர்பான வதந்திகள் பரவி வந்த நிலையில், இந்த பதிவு அந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஆனால், அனுபமா தனது பதிவில் எந்த நபரின் பெயரையும் குறிப்பிடவில்லை. மேலும், காதல், உறவு அல்லது பிரிவு குறித்து நேரடியாக எந்த தகவலையும் பகிரவில்லை. அதேபோல், இதற்கு முன்பு பரவிய வதந்திகளுக்கும் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
குழப்பத்தில் ரசிகர்கள்
எனவே, அவரது இந்த பதிவு தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியதா, தொழில் ரீதியான புதிய முடிவுகளைக் குறிக்கிறதா அல்லது வெறும் வாழ்க்கை குறித்த சிந்தனையா என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கும் வரை உறுதியாக எதையும் கூற முடியாது. இருப்பினும், இந்த ஒரே பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சக்சஸ்ஃபுல் நாயகியாக வலம் வருகிறார். மறுபுறம் துருவ் விக்ரம், ஆதித்யவர்மா படத்தில் அறிமுகமாகி, பின்னர் மகான், பைசன் போன்ற படங்களில் நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

