Dhruv Vikram: கண்ணே பட்டுடும்.. துருவ் விக்ரம் பிறந்தநாளில் வைரலாகும் அவரது சிறிய வயது போட்டோ ஷூட்! போட்டோஸ்!
விக்ரம் மகன் துருவ் இன்று தன்னுடைய 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இவரது சிறிய வயது போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை சியான் விக்ரம் வெளியிட அவரை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Virkam Acting Carrier:
தமிழ் சினிமாவில், மிகவும் போராடி முன்னணி இடத்தை பிடித்த மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரின் தந்தை வினோத் ராஜ் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், இவரின் உறவினரான தியாகராஜன், பிரஷாந்த் போன்றோர் முன்னணி இடத்தில் இருந்தாலும் யாருடைய உதவியும் இன்றி முன்னணி இடத்திற்கு வந்தவர் விக்ரம்.
Vikram movies:
விக்ரம் லயோலா கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடிந்த பின்னர், 1990 ஆம் ஆண்டு இயக்குனர் டி.ஜே.ஜாய் இயக்கத்தில் வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 'தந்து விட்டேன் என்னை', 'காவல் கீதம்', 'மீரா', போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில், மற்ற மொழி படங்களில் நடிக்க முடிவு செய்தார்.
Vikram Comeback movie:
அதன்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஓரளவு இவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவே... அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். ஆனால் விக்ரமின் டார்கெட் தமிழ் திரைப்படங்களாக மட்டுமே இருந்தது. அஜித்துடன் இணைந்து இவர் நடித்த உல்லாசம் திரைப்படம், விக்ரமுக்கு தமிழில் ஒரு பிடிப்பை கொடுத்த நிலையில், பின்னர் தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
Vikram Super Hit Movies:
அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சேது' மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள் போன்ற படங்கள் தாறுமாறு வெற்றியை கண்டன.
Vikram Dedication:
நடிகர் விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கு வேண்டும் என்றாலும், உயிரையே கொடுத்து நடிக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிப்பவர்.
Dhruv Vikram Debut:
அப்பாவை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் கடந்த 2019 ஆம் ஆண்டு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின்... தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் அறிமுகமானார்.
Dhruv Vikram Acting Bala Direction:
இப்படம் ஏற்கனவே 'வர்மா' என்கிற பெயரில் பாலா இயக்கத்தில் உருவான நிலையில், படம் எதிர்பார்த்தது போல் இல்லை என, தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இந்த படத்தை படமாக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த படமும் 2020 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, சில விமர்சனங்களுக்கும் ஆளானது.
Dhruv Vikram 26th birthday:
தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க துருவ் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று தன்னுடைய 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Dhruv Vikram childhood photo shoot:
மகனின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக, சியான் விக்ரம் தன்னுடைய மகனின் சிறிய வயதில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு 'ஹாப்பி பர்த்டே குட்டி சியான் என்கிற கேப்ஷனுடன் சில போட்டோசை வெளியிட, அவரை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.