பரினீதி சோப்ரா - ராகவ் சதா தங்கள் திருமணம் நடக்கும் உதய்ப்பூருக்கு குடும்பத்துடன் தனி விமானத்தில் சென்றனர்!
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில்... இவரது ஏர்போர்ட் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சதா திருமணம் நாளை மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், தங்களின் திருமணத்திற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்தினருடன் உதய்பூர் சென்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா இருவரும் நீண்டகாலம் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம், டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் கடந்த மே மாதம் நடந்தது.
இதை தொடர்ந்து நாளை செப்டம்பர் 24-ஆம் தேதி பரினீதி சோப்ராவும் மற்றும் ராகவ் சதா திருமணம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளது.
எனவே தற்போது பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா குடும்பத்தினர், தனி விமானம் மூலம் நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து உதய்ப்பூருக்கு சென்றனர்.
பரினீதி சோப்ரா மிகவும் எளிமையாக சிவப்பு நிற உடையில்... மேலே ஒரு ஷால் போர்த்தியபடி, விமான நிலையத்திற்கு வந்தார். ராகவ் சதாவும் கருப்பு நிற கேசுவல் உடலில் வந்திருந்தார்.
இன்று இவர்கள் இருவரின் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில்... இதை தொடர்ந்து நாளை திருமணம் நடைபெற உள்ளது. இந்த விசேஷ புகைப்படங்களை பார்க்கவும் ராசிகாரர்கள் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.