MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மயோசிட்டிஸ் சிகிச்சையால் சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை! இனி இதுக்கும் தனி ட்ரீட்மெண்ட்.. அதிர்ச்சி தகவல்!

மயோசிட்டிஸ் சிகிச்சையால் சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை! இனி இதுக்கும் தனி ட்ரீட்மெண்ட்.. அதிர்ச்சி தகவல்!

சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு மருந்துகள் மூலம் அதிக ஸ்டிராய்டு எடுத்து கொண்டதால் புதிய பிரச்னையை சந்தித்து வருவதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 23 2023, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Evergreen Actress Samantha:

Evergreen Actress Samantha:

தென்னிந்திய திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா ரூத் பிரபு. பொதுவாக தென்னிந்திய நடிகைகளுக்கு திருமணத்திற்கு பின்னர், கதாநாயகி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பின்பும் கூட, தொடர்ந்து கதாநாயகியாக நடித்து தென்னிந்திய திரையுலகில் புது ட்ரெண்டை உருவாக்கினார். 
 

26
Samantha VS Naga chaitanya Divorce

Samantha VS Naga chaitanya Divorce

இவரை தொடர்ந்து, தற்போது பல நடிகைகள்... திருமணம் ஆன பின்னர் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் கணவர் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார். கணவரின் பிரிவால் மன அழுத்தத்தை சந்தித்த இவர், இதற்காக கோவில் குளங்களுக்கு சென்று நிம்மதியை தேடியது நாம் அறிந்தது தான். அதே போல் இந்த பிரச்சனையில் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, சரியான பதிலடி கொடுத்தார்.

ஜெமினி, சில்க், தேங்காய், ஜெயம் என.. படத்தின் பெயர் மற்றும் கேரக்டர் பெயரோடு அழைக்கப்படும் நடிகர்கள்!
 

36
Samantha Affected Myositis

Samantha Affected Myositis

நாக சைதன்யாவை பிரிந்த சில மாதங்களில், உடலில் உள்ள தசைகளை பாதிக்கும் மயோசிட்டிஸ் எனும் பிரச்சனையால் சமந்தா பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்க கூட முடியாத நிலைக்கு சென்றார். அந்த நிலையிலும் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க இவர் டப்பிங் பணிகளை மேற்கொண்டது ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அதே போல் பிரபலங்கள் பலரும், விரைவில் சமந்தா, இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வாழ்த்து கூறினர்.

46
Samantha small break in cinema

Samantha small break in cinema

பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்த பின்னர்... ஓரளவு உடல் நலம் தேறிய சமந்தா, தன் கைவசம் இருந்த குஷி படம் மற்றும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து முடித்த பின்னர் மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைய தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி, சிகிச்சை எடுக்க சமந்தா முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனால் தற்போது வரை சமந்தா, எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. ஆனால் தற்போது சில பாலிவுட் படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இது போன்ற கேவலமான வேலையை இதோட நிறுத்திக்கோங்க! கல்யாண வதந்தியால் கடுப்பான சாய் பல்லவி! ஆக்ரோஷ பதிவு!

56
Samantha Talk with Fans

Samantha Talk with Fans

தற்போது சமந்தா மயோசிட்டிஸ் சிகிச்சையில் இருக்கும் நிலையில்,  ​​சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். பின்தொடர்பவர்களில் ஒருவர் சமந்தாவின் சருமம் பற்றி அவரிடம் கேட்டார். மேலும் அவர் மயோசிடிஸ் சிகிச்சைக்காக எடுக்க வேண்டிய ஸ்டீராய்டு ஷாட்களின் காரணமாக அவரது தோலின் தன்மை மாறிவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

66
Samantha about Pigmentation problem:

Samantha about Pigmentation problem:

தோலில் Pigmentation அதிகம் இருப்பதால், அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என சமந்தா கூறியுள்ளார். சமந்தாவின் இந்த Pigmentation பிரச்சனை... மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைந்த பின்னர், துவங்கும் என கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு சின்மயி தான் சமந்தாவுக்கு உதவ உள்ளாராம். ரசிகர்கள் விரைந்து உங்களின் பிரச்சனைகள் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள்.

விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்! இனி அவருக்கு பதில் இவர் தான்.!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சமந்தா ரூத் பிரபு
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved