- Home
- Gallery
- அவங்க மூணு பேருக்கும் முதலில் திருமணம் நடக்கட்டும்.. அப்புறம் தான் எனக்கு - சத்தியம் செய்த புரட்சி தளபதி!
அவங்க மூணு பேருக்கும் முதலில் திருமணம் நடக்கட்டும்.. அப்புறம் தான் எனக்கு - சத்தியம் செய்த புரட்சி தளபதி!
Actor Vishal : பிரபல நடிகர் விஷால் தனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது குறித்து அண்மையில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பல விஷயங்கள், தற்பொழுது பெரிய அளவில் வைரலாகியுள்ளது.

vishal Engagement
சென்னையில் கடந்த 1977ம் ஆண்டு பிறந்த நடிகர் விஷாலுக்கு இப்போது வயது 46. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே அவர் பல மேடைகளில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அவர் ஒரு பெண்ணை நிச்சயம் செய்த நிலையில் இறுதி நேரத்தில் அந்த திருமணம் ரத்தானதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஷால் "அந்த மூன்று நடிகர்களுக்கும் திருமணமான பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Vijay Antony: விஜய் ஆண்டனியின் அடுத்த 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
STR
நடிகர் சிம்பு கடந்த 1983ம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு வயது இப்பொழுது 41, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் இவரும் இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. பல நடிகைகளோடு கிசுகிசுக்களில் அடிபட்டாலும் கூட தற்போது வரை அவர் சிங்கிளாக தான் இருக்கிறார்.
Prabhas
பிரபல நடிகர் பிரபாஸ் கடந்த 1979 ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு இப்பொழுது வயது 44. இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்கும் நடிகர்களில், டாப் 5 நடிகர்களில் இருப்பவர் தான் பிரபாஸ். பல கோடிகளுக்கு சொந்தக்காரரான பிரபாஸ் இன்றளவும் சிங்கிளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Salman khan
சல்மான் கான், இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 வயதை தொடப்போகும் நடிகர் சல்மான்கான் தான் இந்திய திரை உலகிலேயே மிகவும் மூத்த சிங்கிள் என்று கூறினால் அது மிகையல்ல. அவர் இதற்குப் பிறகு திருமணம் செய்து கொள்வாரா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் இவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்ட பிறகுதான் தான் திருமணம் செய்ய உள்ளதாக விஷால் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ. 200 கோடி? இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் OTT ஸ்டார் இவங்க தான்.. ஆலியா, தீபிகா படுகோன் இல்ல..