நெருங்கும் தேர்தல் ரிசல்ட்... வெற்றி பெற வேண்டி கோவில் கோவிலாக சுற்றும் நடிகை ரோஜா - திருவண்ணாமலையில் தரிசனம்

திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா, தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன் மோகன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என கூறினார்.

First Published May 20, 2024, 12:28 PM IST | Last Updated May 20, 2024, 12:28 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட நடிகையும் தெலுங்கு தேச கட்சியின் நகரி தொகுதி வேட்பாளருமான நடிகை ரோஜா  இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. 

சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோஜா, நான் ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவதாகவும் அதே போல நேற்று இரவு கிரிவலம் மேற்கொண்டு இன்று  அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளதாகவும் அண்ணாமலையார் அருளால் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிராத்தித்தாகும் வருகின்ற தேர்தலில் ஜெகன்மோகன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் எனவும் ரோஜா பேட்டி அளித்தார்.

Video Top Stories