- Home
- Gallery
- ஓ இது தான் குரங்கு வித்தையா! கையை.. காலை தூக்கி கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!
ஓ இது தான் குரங்கு வித்தையா! கையை.. காலை தூக்கி கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!
நடிகை பிரியா பவானி ஷங்கர், வெக்கேஷன் சென்ற இடத்தில்... குரங்கு சேட்டையெல்லாம் செய்து கொண்டு எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில், நடிகையாக அறிமுகமாகும் அனைவருக்குமே, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் அளவுக்கு கதாபாத்திரங்கள் அமைவது இல்லை. ஆனால் பிரியா பவானி ஷங்கரின் அதிஷ்டம் அப்படி பட்ட பட வாய்ப்பு இவருக்கு அமைந்தது.
பிரியா பவானி ஷங்கர் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து, சீரியல் நடிகையாக மாறி பின்னரே... திரைப்பட நடிகையாக மாறினார் என்பது நாம் அறிந்ததே. இவர் முதல் முதலில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான மேயாத மான் படத்தில்... வைபவுக்கு ஜோடியாக நடித்தார்.
லோ பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தது சில முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், பொம்மை, அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, விஷாலுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியான ரத்னம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதே போல் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக உள்ள இந்தியன் படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். பிரியா பவானி நடித்து முடித்துள்ள டிமான்டி காலனி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அம்மணியின் கைவசமுள்ள சுமார் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.
பிரியா பவானி காட்டில் பட மழை குவிவதால்... 1 கோடி வரை தன்னுடைய சம்பளத்தையும் அலட்டி கொள்ளாமல் வாங்குகிறார். இப்படி கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணத்தில் பீச் ஹவுஸ், சொகுசு கார், ஹோட்டல் பிஸ்னஸ் என செழிப்பாக வாழ்ந்து வரும் இவர் அடிக்கடி காதலனுடன் வெளிநாட்டுக்கு டேட்டிங் பறக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருப்பதால், எங்கு சென்றாலும் அது குறித்த புகைப்படங்களை பதிவிடுகிறார். அந்த வகையில் இவர் குரங்கு சேட்டை செய்தபடி... வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Shah Rukh Khan Photos: குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்! வைரலாகும் போட்டோஸ்!