MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இது போன்ற கேவலமான வேலையை இதோட நிறுத்திக்கோங்க! கல்யாண வதந்தியால் கடுப்பான சாய் பல்லவி! ஆக்ரோஷ பதிவு!

இது போன்ற கேவலமான வேலையை இதோட நிறுத்திக்கோங்க! கல்யாண வதந்தியால் கடுப்பான சாய் பல்லவி! ஆக்ரோஷ பதிவு!

நடிகை சாய் பல்லவி, தன்னுடைய திருமண வதந்தி குறித்து வெளியான தகவலுக்கு, இப்படி கேவலமான வேலைகளை இனிமேல் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 22 2023, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sai Pallavi:

Sai Pallavi:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நாக சைதன்யா நடிக்கும் NC 23 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

25
NC 23 movie pooja:

NC 23 movie pooja:

மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளோடு, ஒரு நிஜ நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் மிக பிரமாண்டமாக போடப்பட்டது. இந்த பூஜையில் சாய் பல்லவியும் கலந்து கொண்டார். பூஜையில் முக்கிய பிரபலங்கள் அனைவருக்குமே மாலை அணிவிக்கப்பட்ட நிலையில், சாய் பல்லவி மற்றும் இயக்குனர் அருகருகே நின்றபோது எடுத்த புகைப்படத்தை சிலர் வேண்டும் என்றே... எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது படு வைரலானது.
 

35
Sai pallavi Marriage rumor:

Sai pallavi Marriage rumor:

எனவே சாய் பல்லவி இயக்குனரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்தி சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து மிகவும் ஆக்ரோஷமாக பதிவு போட்டு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுளளார் சாய் பல்லவி. 

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போகும் சூப்பர் சிங்கர் திவாகர்! நிறைமாத மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போட்டோஸ்!
 

45
Sai pallavi photos edited:

Sai pallavi photos edited:

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "நான் வதந்திகள் பற்றி பொதுவாக கவலைப்பட மாட்டேன். ஆனால் அது என் குடும்பத்தினைரை பாதிக்கும் போது, நான் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். எனது புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சியிலிருந்து ஒரு படத்தை வேண்டும் என்றே சிலர் திட்டமிட்டு எடிட் செய்து கேவலமான நோக்கத்தோடு வெளியிட்டு வதந்திகளை பரப்பியுள்ளனர்.
 

55
Sai Pallavi Clarified rumor:

Sai Pallavi Clarified rumor:

எனது தொழில் ரீதியான மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சில வேலை இல்லாதவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள்,  விளக்கம் அளிக்கும் அளவுக்கு மாறியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கேவலமான வேலையை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் சாய் பல்லவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்! இனி அவருக்கு பதில் இவர் தான்.!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாய் பல்லவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved