MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • டி20 உலகக் கோப்பையில் இடம் பெறாத நடராஜன் பர்பிள் கேப் வென்று சாதனை!

டி20 உலகக் கோப்பையில் இடம் பெறாத நடராஜன் பர்பிள் கேப் வென்று சாதனை!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான 50ஆவது லீக் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் நடராஜன் முதலிடம் பிடித்து பர்பிள் கேப் வென்றுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : May 03 2024, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

ஹைதராபாத்தில் நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 76 ரன்களும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களும் எடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

37
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

பராக் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 13 ரன்னிலும், துருவ் ஜூரெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆர் ஆர் அணியின் வெற்றிக்கு கடைசி 25 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது.

47
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

அப்போது புவனேஷ்வர் குமார், நடராஜன் இருவரும் சிறப்பாக பந்து வீசினர். இதையடுத்து கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புவனேஷ்வர் குமார் அந்த சிறப்பாக வீசி முடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோவ்மன் பவல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

57
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

67
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

நடராஜன் இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் நடராஜன் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்தவருக்கான பர்பிள் கேப் வென்றார். பும்ரா 14 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.

77
SRH

SRH

இந்த நிலையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களுக்கான பர்பிள் கேப் வென்ற நடராஜன் தனது மகளுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாத நடராஜன் பர்பிள் கேப் வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
SRH vs RR
சஞ்சு சாம்சன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved