Savukku shankar : சவுக்கு சங்கரை முடக்க முயற்சியா.? திமுக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய எடப்பாடி

தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
 

Edappadi has accused the DMK government of trying to eliminate savukku shankar Media KAK

சவுக்கு சங்கருக்கு ஆதரவாக எடப்பாடி

திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், சவுக்கு சங்கர் ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திமுக அரசு கைது செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம்.

Edappadi has accused the DMK government of trying to eliminate savukku shankar Media KAK

பொய் பிம்பத்தில் ஸ்டாலின்

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின்  அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு  முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Vijayakanth : மறைந்தும் மக்களுக்கு உணவு கொடுக்கும் வள்ளல்... விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios