ஜெமினி, சில்க், தேங்காய், ஜெயம் என.. படத்தின் பெயர் மற்றும் கேரக்டர் பெயரோடு அழைக்கப்படும் நடிகர்கள்!
சில நடிகர்கள் தங்களின் உண்மையான பெயருடன், திரைப்படத்தின் பெயர், மற்றும் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் பெயர்களை இணைத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அப்படி இதுவரை தங்களின் பெயருடன் குறிப்பிட்ட அடையாள பெயர்களை இணைத்து கொண்ட பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kalabhavan Mani
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் உண்மையான பெயர் 'மணி' என்பது மட்டுமே... இந்த கலாபவன் என்பது கொச்சியில் உள்ள கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஒரு நிறுவனத்தின் பெயர். மணியின் மிமிக்கிரி திறமை, இந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றிய போது போதுதான் மிகவும் பிரபலமாகி, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனவே 'கலாபவன்' என்பதை தன்னுடைய பெயருடன் இணைத்து கொண்டார்.
Gemini Ganesan
திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார்.
இது போன்ற கேவலமான வேலையை இதோட நிறுத்திக்கோங்க! கல்யாண வதந்தியால் கடுப்பான சாய் பல்லவி! ஆக்ரோஷ பதிவு!
Nizhalgal Ravi
தமிழ் சினிமாவில் எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் பின்னி பெடல் எடுக்கும் நிழல்கள் ரவியின் நிஜ பெயர் ரவி மட்டுமே. பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலம் இவர் பிரபலமடைந்ததால், நிகழ்கள் ரவி என்றே அழைக்கப்பட்டார்.
thalaivasal vijay
கோலிவுட் திரையுலகில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய முக்கிய நடிகர்களில் ஒருவர் தலைவாசல் விஜய். எஸ்.பி.பி பாலசுப்ரமணியம், நாசர், ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில்... வெளியான 'தலைவாசல்' படத்தின் மூலம் அறிமுகமானதால் தலைவாசல் விஜய் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
Jayam Ravi
தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் 'ஜெயம்'. எனவே இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியாக மாறினார்.
Aadukalam naren and Aadukalam Murugadass
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற ஆடுகளம் படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நரேன் மற்றும் முருகதாஸ் ஆகியோர் அறிமுகமானதால், ஆடுகளம் என்கிற பெயரும் இவர்களின் நிஜ பெயரோடு இணைந்து விட்டது.
Thengai Srinivasan
படங்களின் பெயர்களை தவிர்த்து, சிலருக்கு அவர்களின் கதாபாத்திரம் கூட புனைபெயராக மாறியுள்ளது. அப்படி தான் ஸ்ரீனிவாசன்... தேங்காய் ஸ்ரீனிவாசனாக மாறினார். "தேங்காய் சீனிவாசன் 'ஒரு கல் மனம்' என்கிற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதை பார்த்த , பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு, இனி அவரை "தேங்காய் ஸ்ரீனிவாசன்" என்று அழைக்க வேண்டும் என்று கூறியதால், திரைப்படங்களில் மட்டும் அல்ல ரசிகர்களும் காலம் கடந்து அவரை அப்படியே அழைத்து வருகிறார்கள்.
Sivaji Ganesan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்ததன் மூலம் அவருக்கு அந்த பெயர் வந்தது. அப்போது முதல் வெறும் கணேசன், சிவாஜி கணேசனாக மாறினார்.
இதுக்கு டவல் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! எல்லை மீறிய கவர்ச்சியில்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி! போட்டோஸ் !
Daniel Balaji
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி, தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திவரும் டேனியல் பாலாஜி, சித்தி செயலில் டேனியல் கதாபகரத்தில் நடித்தார். பின்னர் இதுவே இவரின் அடையாளமாக மாறி டேனியல் பாலாஜியாக மாறினார்.
Vijayakanth
அதே போல் விஜயகாந்த் இதுவரை ஆயுதப்படைகளிலோ அல்லது காவல்துறையிலோ பணியாற்றவில்லை என்றாலும், 1991 இல் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் அவர் ஒரு போலீஸ்காரராக நடித்ததன் மூலம், விஜயகாந்த் தன்னை "கேப்டன்" என்ற புனைப்பெயரைப் பெற்றார்.
Silk Smitha
நடிகை சில்க் ஸ்மிதா, இயக்குனர் வினு சக்ரவர்த்தியால் ஸ்மிதா என பெயர் மாற்றப்பட்டார். மேலும் அவரது அறிமுகமான வண்டிச்சக்கரம் படத்தில் அவரது கதாபாத்திரத்திலிருந்து சில்க் என இருந்ததால் சில்க் ஸ்மிதாவாக மாறினார்.