MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த இடியாக இறங்க உள்ளது யார்? மரண பீதி ரேணுகா - நந்தினி முகத்தில் ஆட்டம் போடுதே!

'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த இடியாக இறங்க உள்ளது யார்? மரண பீதி ரேணுகா - நந்தினி முகத்தில் ஆட்டம் போடுதே!

'எதிர்நீச்சல்' தொடரின் இன்றைய புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தையும், சந்தேகத்தையும், ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 22 2023, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Athi Gunasekaran

Ethirneechal Athi Gunasekaran

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரை, இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் தூணாக கருதப்பட்ட,  ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவருடைய கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. சில வெள்ளித்திரை நடிகர்களுடன் சீரியல் குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இதுவரை யார் நடிப்பது என முடிவு செய்யப்படாமல் உள்ளது.

25
Ethirneechal new story

Ethirneechal new story

மேலும் ரசிகர்களும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆதி குணசேகரன் இல்லாமல் தற்போது சீரியல் மற்றொரு கதைகளத்தில் பயணிக்க துவங்கியுள்ளது. மேலும் குணசேகரன் தற்போது வீட்டில் லெட்டர் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வெளியேறியது போல் காட்சிகள் காட்டப்பட்டன.

விஜய் டிவி 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

35
New character entry:

New character entry:

அதே போல் நேற்றைய தினம் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழியை கொன்றது யார்? என கௌதம் விசாரித்த போது, ஆதி குணசேகரன் தான் கொலை செய்தார் என்கிற உண்மை கௌதமுக்கு தெரிய வருகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், யாரும் எதிர்ப்பாராத விதமாக ஒரு கேரக்டர் தற்போது சீரியலில் இணைந்துள்ளதா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது இன்றைய புரோமோ.

45
Visalatchi angry speech:

Visalatchi angry speech:

அதன்படி இன்றைய புரோமோவில், "ஜான்சி ராணி அப்பத்தா சொன்ன மாதிரி, நீங்க அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்க்கிட்டே இருக்கணும் நா, அது என்ன அடுத்தடுத்த கட்டம்னு கேட்டு சொல்லுங்க என கூறுகிறார்". இதற்கு நந்தினி "ஏன் உனக்கு அவ்வளவு தான் மரியாதை" என்று சொல்ல. திடீர் என குறுக்கிடும், விசாலாட்சி "இந்தா பாருங்கடி, இதோட எல்லாத்தையும் நிப்பாட்டிக்கோங்க போதும் என்று சொல்கிறார்" விசாலாட்சியால் இவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு, கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

Arun Vijay: படிக்கும் போது அம்மா சொன்ன அந்த வார்த்தை! காதல் என்றாலே பயந்து நடுங்கிய நடிகர் அருண் விஜய் ஓப்பன்

55
Big twist in Today episode:

Big twist in Today episode:

அந்த நேரத்தில் தான் ஒரு கார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைகிறது.  இதை பார்த்துவிட்டு கரிகாலன் அத்தை அடுத்த இடி வந்துருச்சு என கரிகாலன் கூறுகிறார். ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் மரண பீதியில் பார்க்கின்றனர். எனவே இன்றைய தினம் காரில் வந்து இறங்கப் போவது எதிர்நீச்சல் சீரியலை மற்றொரு கோணத்தில் கொண்டு செல்லும் புதிய கதாபாத்திரமா? அல்லது மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிக்க உள்ள நபரா என்பது தெரியவரும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved