எதிர்பார்ப்பை எகிற வைக்கும் RCB vs CSK போட்டி: வாழ்வா? சாவா? கட்டத்தில் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி ஐபிஎல் கிரிக்கெட்டில் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
RCB vs CSK IPL 2024
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணி இடம் பெற்று விளையாடி வருகிறது. இதுவரையில் ஆர்சிபி அணியில் கேப்டன்கள் மாறினாலும் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை.
RCB vs CSK IPL 2024
இதுவரையில் 16 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த 16 சீசன்களில் ஆர்சிபி 8 முறை மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது. இதில், 3 முறை மட்டுமே இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் 7, 1, 3, 1, 5, 5, 7, 3, 1, 8, 6, 8, 4, 3, 4, 6 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது என்று விக்கிபீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
RCB vs CSK IPL 2024
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஆர்சிபி ஃபர்ஸ்ட் ஆஃப்பில் விளையாடிய 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்திருந்தது. ஆனால், பின் பாதியில் நடைபெற்ற கடைசி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
RCB vs CSK IPL 2024
ஆனால், இப்போது பிளே ஆஃப் ரேஸில் இடம் பெற்றிருக்கிறது. அதற்கு கடைசியாக நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் திரும்பி பார்க்காமல் வெளியேற வேண்டும்.
RCB vs CSK IPL 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும் அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதோடு, 2ஆவதாக பேட்டிங் செய்தால், 18.1 ஓவர்களுக்குள்ளாக சிஎஸ்கே அடிக்கும் ரன்களை அடித்து வெற்றி பெற வேண்டும்.
RCB vs CSK IPL 2024
அப்படி இல்லை என்றால், இந்த முறையும் ஆர்சிபியின் டிராபி கனவு வெறும் கனவாகவே சென்றுவிடும். ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான ஐபிஎல் டிராபி தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியானது 2ஆவது சீசனிலேயே டிராபியை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.
RCB vs CSK IPL 2024
இதன் காரணமாக இன்று, நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளுக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சேப்பாக்கத்தில் தொடங்கிய இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தியது.
RCB vs CSK IPL 2024
இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக ஃபைட் பண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.