அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கம்பன் படுகாயம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Share this Video

தமிழக அரசின்  பொதுப்பணி துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. அமைச்சர் மட்டுமின்றி திமுக தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் கம்பன் தற்போது திமுக மருத்துவ அணியில் மாநில பொறுப்பில் உள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

அமைச்சரின் மகன், உதவியாளர், ஓட்டுநர் மற்றும் மற்றொரு காரில் பயணித்த இருவர் என அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து யாரால் ஏற்பட்டது? எப்படி? குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video