Asianet News TamilAsianet News Tamil

கார்கில் போர் 25வது ஆண்டு தினம்.. போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி!

கார்கில் போர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி கார்க்கில சென்று அங்குள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். 

First Published Jul 26, 2024, 7:48 AM IST | Last Updated Jul 26, 2024, 7:48 AM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.  இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கார்கில் செல்கிறார். அங்கு அவர் போரின் போது வீரமரணம் அடைந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். 

Video Top Stories