குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Herbal Bath Ideas : குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளித்தால், பருவமழை காலங்களில் நோய் தொற்றுகள் உங்களை அண்டாது.
மழைக்காலம் ஆரம்பமாகப் போகிறது. இந்தப் பருவத்தில் பருவகால நோய் தொற்றுகள் அதிகரித்து வரும். ஜலதோஷம், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், சில இயற்கையான விஷயங்களைக் கொண்டு இவற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அது வேறு ஏதுமில்லை, குளிக்கும் தண்ணீரில் சிலவற்றை கலந்து குளித்தால், இந்த பருவகால நோய்கள் நம்மை அண்டாது. அது என்ன மாதிரியான பொருட்கள் என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
வேம்பு : வேம்பு மருத்துவ குணமுடையது. எனவே, வேப்பம்பூ மற்றும் இலையை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக, இவை சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. அதிலும் குறிப்பாக, வேப்பம்பூவை தண்ணீரில் கலந்து குளித்தால் பருவ கால நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது மற்றும் சொறி அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
துளசி இலைகள் : துளசி ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த இலையை தண்ணீரில் போட்டு சூடாக்கி, குளித்தால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் பருவகால நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: குளிக்கும்போது நீங்க செய்யக்கூடாத பொதுவான தவறுகள்.. மீறினால் இந்த பிரச்சனைகள் வரும்!
மஞ்சள் : மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே இதை தண்ணீரில் கலந்து குளித்தால் சருமத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
செம்பருத்தி இலை : ஒவ்வொரு வீட்டிலும் செம்பருத்தி செடி கண்டிப்பாக இருக்கும். பொதுவாக செம்பருத்தி பூ முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இதன் இலையை தண்ணீரில் போட்டு சூடாக்கி, பின் அந்த நீரில் குளித்தால் பருவகாலத்தில் சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும்.
இதையும் படிங்க: குளிக்கும் தண்ணீரில் இவற்றை கலந்து குளிங்க.. அதிஷ்டத்தின் கதவு திறக்கும்! பணம் மழை பொழியும்!
சூடான நீர் : பொதுவாகவே பருவமழை காலங்களில் வெந்நீரில் குளிப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாக்டீரியாக்களைக் கொல்லும். குறிப்பாக, சருமத்தில் இறந்த செல்களை நீக்கும். எனவே, பருவகால நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க, வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக வெந்நீரில் குளியுங்கள்.