குளிக்கும்போது நீங்க செய்யக்கூடாத பொதுவான தவறுகள்.. மீறினால் இந்த பிரச்சனைகள் வரும்!
குளிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், இது தொடர்பான சில தவறுகள் நன்மைகளை குறைக்கும்.

வெளியில் இருந்து வந்தாலோ அல்லது சோர்வாக இருந்தாலும் குளிக்க வேண்டும் என்று நம் அனைவருக்கும் தோன்றும். பொதுவாகவே, குளிப்பது நம்முடைய தினசரி வழக்கத்தில் ஒன்று. இதன் மூலம் நம் உடல் சுத்தமாக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம், வியர்வை மற்றும் பாக்டீரியா வெளியேற்றப்படுகிறது.
குளிப்பது மிகவும் நல்லது தான். ஆனால், குளிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் எல்லாவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியமான விஷயம் என்வென்றால், பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் இந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். எனவே, குளிக்கும் போது நாம் செய்யும் தவறுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அடிக்கடி குளிப்பது: சிலருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இப்படி செய்வதினால், முடி வலுவிழந்து போகும். உண்மையில் நம் தலையின் தோலில் இயற்கை எண்ணெய் உள்ளது. இது தலை முடிக்கு ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. எனவே, நாம் தினமும் தலைக்கு குளிப்பதினால் இந்த இயற்கை எண்ணெய் போய் முடி வலுவடைகிறது.
பெணுகளுக்கு.. அதுபோல பெண்கள் தலைக்கு குளித்த பிறகு ஈரமான தல முடியை டவலால் போர்த்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாக முடி வலுவிழந்து, உடைந்து கூட போய்விடும். ஏனெனில், துண்டின் கனமான நார் முடியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சூடான நீரில் குளியல்: குளிர்காலம் (அ) மழைக்காலத்தில் சூடான நீரில் குளிப்பது நல்லது தான். ஆனால், அதை அடிக்கடி செய்தால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் நீங்கி சருமம் மிகவும் வறட்சியாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குளித்த உடனேயே சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
பாடி வாஷ்: சில குளிப்பதற்கு பாடி வாஷ் பயன்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் பாடி வாஷ் வாங்கும் முன் அதன் லேபிளை படித்து வாங்குங்கள். ஏனெனில் பாடிவாஷ்களில் வாசனைக்காக கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றது. இவை தோல் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் தோல் வெடிப்பு வளர்ச்சி போன்றவை கூட நேரிடலாம்.
இதையும் படிங்க: Health Tips : குளித்த உடனே தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..!!
ஸ்கிரப்: குளிக்கும்போது ஸ்கிரப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், இது தோளின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. ஆனால், இதை வாரத்திற்கு 2 (அ) 3 முறை மட்டுமே பயன்படுத்துங்கள். அதற்கு மேல் பயன்படுத்தினால் இது வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் சருமத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D