தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
தளபதி விஜய் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம், அவருக்கு இருந்த கெட்ட பழக்கம் தான் என பிரபல இயக்குனர் பரதன், தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Director Bharathan:
தளபதி விஜயின் கால் ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருந்த நிலையில், தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, தன்னை அழைத்து தளபதி விஜய் 'அழகிய தமிழ் மகன்' பட வாய்ப்பு கொடுத்ததாக கூறியுள்ளார் இயக்குனர் பரதன். இயக்குனர் பரதன் 2001 ஆம் ஆண்டு விக்ரம் - லைலா நடிப்பில், தரணி இயக்கத்தில் வெளியான 'தில்' திரைப்படத்தின் மூலம் டயலாக் ரைட்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் தூள், கில்லி, மதுர, நினைத்தாலே, என அடுத்தடுத்து பல படங்களில் டயலாக் ரைட்டராக பணிபுரியும் வாய்ப்பை பெற்றார்.
Azhagiya Thamilmagan movie:
தளபதி விஜய் நடித்த கில்லி - மதுர போன்ற படங்களில் இவர் பணியாற்றிய போது, விஜய்க்கும் இவருக்கும் இருந்த நட்புதான் 2007 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'அழகிய தமிழ் மகன்' திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது. மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி கெத்து காட்டினார் இயக்குனர் பரதன். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், இதை தொடர்ந்து அதிதி என்கிற படத்தை இயக்கினார். பின்னர் மீண்டும் 2017 ஆம் ஆண்டு, பைரவா படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்ட பரதன், தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, என்னை வீட்டுக்கு வர சொல்லி... கதையை கூட கேட்காமல் 'அழகிய தமிழ் மகன்' பட வாய்ப்பை விஜய் கொடுத்தார்.
பாத்திமா பாபுவை மிரட்டியது யார்? திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
Vijay Popular Dialogue:
அதனால் தான் "பைரவா" படத்தில் விஜய் இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்குது... சொன்ன வார்த்தையை காப்பாத்தறது என பேசி இருப்பார். அதாவது சொன்ன வார்த்தையை பலர் காப்பாற்றுவதை ஒரு கெட்ட பழக்கமாக பார்க்கும் நிலையில், அந்த கெட்ட பழக்கம் எனக்கு இருக்கு என்பதை விவரிக்கும் விதத்தில் தான் அந்த டயலாக் இடம் பெற்றிருக்கும். படத்தில் மட்டும் அல்ல இதை விஜய் தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருகிறார். விஜய்யிடமும் இந்த டயலாக் உங்களிடம் இருந்து எடுத்து எழுதியது தான் என கூறி இருந்தேன். மேலும் இந்த டயலாக் 'பைரவா' படத்தில் மூன்று இடத்தில் வரும், ஆனால் மூன்றுமே சரியான சூழ்நிலையில் சொல்வது போல் மைந்திருக்கும், திணிக்கப்பட்டது போல் இருக்காது என கூறி இருந்தார். இந்த டயலாக் பெரிய அளவில் ரீச் ஆனாலும் கூட, படம் அந்த அளவுக்கு ரீச் ஆகாமல் போனது. அதற்கு காரணம், ஏற்கனவே மெடிக்கல் கிரைம் குறித்து பல படங்கள் வந்திருப்பதால்... பத்தோடு பதினொன்னாகவே 'பைரவாவும் பார்க்கப்பட்டது. விமர்சன ரீதியாக சில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும், இப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூபாய் 120 கோடி வசூல் செய்தது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். ஜெகபதிபாபு, சதீஷ், டானியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்து.
H vinoth
தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 69 ஆவது படத்தை நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதற்கு முன்னதாக... தான் துவங்கியுள்ள அரசியல் கட்சியான 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் தளபதி விஜய், தன்னுடைய கட்சி கொடி மற்றும் கட்சி பாடலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!
Goat Movie
அதேபோல் தளபதி விஜய் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடித்திருந்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான நிலையில், ஒரு வாரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதுவரை சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.