சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
தளபதி விஜய், தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் 'Goat' படம் பார்த்ததாக கூறப்பட்ட நிலையில்... உண்மையில் தளபதி யாருடன், 'கோட்' படத்தை பார்த்துள்ளார் என்கிற புகைப்படம் வைரலாகி வருகிறது.
Vijay Family
தளபதி விஜய் நடிப்பில் நேற்று வெளியான அவருடைய 'கோட்' திரைப்படத்தை மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து பார்த்ததாகவும், இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக பரவி வந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இவை அனைத்தும் பொய்யா? என யோசிக்க வைத்துள்ளது தற்போது விஜய் பிரபலங்களுடன் 'கோட்' திரைப்படம் பார்த்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம்.
GOAT Movie
தளபதி விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே... குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் புகைந்து கொண்டிருப்பதாக சினிமா விமர்சகர்கள், விஜய் தரப்பில் இருந்து வெளியாகும் தவகவல்களின் அடிப்படையில் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்ப, தளபதி விஜய் தரப்பில் இருந்தும், இப்படி வெளியாகும் தகவல்களுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படாதது மட்டும் இன்றி, தளபதி தன்னுடைய மனைவி சங்கீதா இல்லாமல் தான் திரைப்பட விழாக்கள் மற்றும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். விஜய்யின் இந்த செயல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மனதில் மேலும் சந்தேகத்தை விதைத்தது.
தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படங்கள் எல்லாம் ரீமேக் படங்களா?
Vijay Watch Goat film With Wife
ஆனால் மற்றொரு தரப்பினரோ.. தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் உள்ள அவருடைய அப்பா வீட்டில் இருப்பதாகவும், விஜயின் மகள் திவ்யா சாஷா லண்டனில் படித்து வருவதால் தன்னுடைய மகளை அங்கிருந்து கவனித்து கொள்வதாக கூறி வந்தனர். என்னதான் இருந்தாலும் விடுமுறை நாட்களில் கூட சங்கீதா ஏன் சென்னை வந்து தளபதியை சந்திக்கவில்லை என்கிற கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. அதேபோல் விஜயின் மகன் ஜேசன் சஞ்சையும் அப்பா மீது கோபத்தில் உள்ளதாக சிலர் கொளுத்தி போட்டனர்.
TVK Vijay
இதற்கு காரணம் விஜய் அரசியலில் ஈடுபட உள்ளது சங்கீதா மற்றும் குடும்பத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காதது தான் என கூறினர். தளபதி விஜய்யின் மகன் இயக்குனராக அறிமுகமாகும் தகவல் வெளியான போது கூட, விஜய் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து செய்தி என எதுவும் கூறவில்லை. இந்த அறிவிப்பு வெளியாகும் வரை... இந்த தகவல் கூட விஜய்க்கு தெரியாது என கூறப்பட்டது. விஜய் குடும்ப பிரச்சனை குறித்த சர்ச்சை ஒருபுறம் நீடித்து கொண்டிருந்தாலும் தளபதி எந்த ஒரு பிரச்சனையையும் வெளியே காட்டி கொள்ளாமல் சினிமா மற்றும் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
Trisha in GOAT
விஜய் மீது சங்கீதா மற்றும் மகன் கோவமாக இருக்க, அரசியல் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம்... நடிகை திரிஷா என கூறப்பட்டது. ஏற்கனவே த்ரிஷாவுடன் நடிக்க கூடாது என சங்கீதா கண்டீஷன் போட்டதை தொடர்ந்து, விஜய் நயன்தாராவுடன் இணைந்து நடித்தாலும், திரிஷா பக்கமே தலை வைக்காமல் இருந்தார். ஆனால் மீண்டும் இவர்களின் ரிலேஷன் ஷிப் தொடர்ந்தது மட்டும் இன்றி, லியோ படத்தில் ஜோடியாகவும் நடித்திருந்தனர். அதிலும் லிப் லாக் காட்சியில் எல்லாம் நடித்து அசர வைத்தார் விஜய். கோட் படத்திலும்... மட்ட பாடலுக்கு மிரட்டலாக ஆட்டம் போட்டார். விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல லிப்டில் இருந்த படி திரிஷா வெளியிட்ட புகைப்படம், படு வைரலாக பார்க்கப்பட்டது.
Vijay watch goat movie with Yuvan and Venkat prabhu
இது போன்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், தளபதி விஜய் நேற்று வெளியான 'கோட்' படத்தை, மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா, மற்றும் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தாய் ஷோபனா, ஆகியோருடன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு களித்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், தற்போது விஜய் உண்மையில் யாருடன் 'கோட்' திரைப்படம் பார்த்துள்ளார் என்கிற புகைப்படம் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து... சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நைட் ஷோ படம் பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ராதிகாவுக்கு இந்த அசிங்கம் தேவையா? ஃபேக் பயரான விவகாரம்.. பங்கம் பண்ணிய பயில்வான்!
Thalapathy Vijay
இதை தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர் 'அப்போ தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்தோடு படம் பார்த்தார் என்று சொல்வது சுத்த பொய்யா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... இது போன்ற சந்தேக கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.