Asianet News TamilAsianet News Tamil

மகாத்மா காந்தி 154 வது பிறந்தநாள்.. காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்..

மகாத்மா காந்தியடிகளின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா திருவுருவ சிலைக்கு ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

Mahatma Gandhi 154th birth anniversary - People paid tribute
Author
First Published Oct 2, 2022, 5:54 PM IST

மதுரை உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 வது ஜெயந்தி விழாவையொட்டி,  இன்று விடுதலை நாள் அமுதப் பெருவிழா என்ற சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 

பின்னர் காந்தி நினைவு அருங்காட்சியக பொருளாளர் செந்தில்குமார் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வும் காலை பிராத்தனையும் நடைபெற்றது

மேலும் படிக்க:அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

மேலும் காந்தியடிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காந்தி நினைவு அருங்காட்சியாக அரங்கில் " மாணவர்களுக்கு மகாத்மா " எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது 

காந்தி அஸ்தி பீடத்தில் பள்ளி குழந்தைகள் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர் .

மேலும் படிக்க:6 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சர்ச்சை கேள்வி... வலுக்கும் கண்டனங்கள்!!

Follow Us:
Download App:
  • android
  • ios