Asianet News TamilAsianet News Tamil

6 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சர்ச்சை கேள்வி... வலுக்கும் கண்டனங்கள்!!

தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் அண்ணல் அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றதை அடுத்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

controversy question in 6th book  at chennai private CBSC school
Author
First Published Oct 2, 2022, 5:12 PM IST

தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் அண்ணல் அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றதை அடுத்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சின்மயா மிஷன் அறக்கட்டளை சார்பாக இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்களை சின்மயா அறக்கட்டளையே தயாரித்து வழங்குகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தை குறி வைத்துள்ள ஆர்எஸ்எஸ்.! இங்கு வேலைக்கு ஆகாது... வாலை சுருட்டிக் கொள்ளனும்-இறங்கி அடிக்கும் திருமா

controversy question in 6th book  at chennai private CBSC school

அதுமட்டுமில்லாமல், பல தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இவர்கள் தயாரிக்கிற பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில், சென்னை குரோம்பேட்டையில் இருக்கக்கூடிய ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில், சின்மயா அறக்கட்டளை தயாரித்துள்ள பாடப்புத்தகம் மாணவர்களுக்கு பாடமாக நடத்தப்படுகிறது. அதில் 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், வர்ணாசிரமம் குறித்த பாடம் இடம்பெற்றிருந்தது. சிபிஎஸ்இ பள்ளிக்காக சின்மயா அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தக்கத்தில், அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்றும் கட்டணமில்லா பயணம் - வாகன ஓட்டிகள் ஹேப்பி

controversy question in 6th book  at chennai private CBSC school

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த் வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியதோடு, மத்திய கல்வி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios