கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் ட்ராக்டர் கவிழ்ந்து 27 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம் !
உபியில் நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் யாத்திரைக்கு வந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 26 யாத்திரிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது.
இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ
இந்த கோயிலுக்கு கான்பூரின் கதம்பூர் பகுதியில் இருந்து 50 யாத்திரிகர்கள் டிராக்டர் ஏறி பயணம் செய்தனர். இவர்கள் நேற்று கோயிலில் இருந்து திரும்பி வந்த கொண்டிருந்த போது, கான்பூரின் பாஹாதுனா கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு, மீதமுள்ள நபர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க..கேரளா மூத்த சிபிஎம் தலைவர் மறைவு - யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன் ?
முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!