தான் படிக்கா விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.. அதனால்தான் அவர் " பெருந்தலைவர் "
எத்தனையோ அரசியல் தலைவர்கள் வருகின்றனர் மறைகின்றன ஆனால் தான் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஒட்டு மொத்த தமிழகத்தின் தலையெழுத்தையும் திருத்தி எழுதிய படிக்காத மேதை ஒருவர் உண்டென்னால் அது பெருந்தலைவர் காமராஜராகத்தான் இருக்க முடியும்.
எத்தனையோ அரசியல் தலைவர்கள் வருகின்றனர் மறைகின்றன ஆனால் தான் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஒட்டு மொத்த தமிழகத்தின் தலையெழுத்தையும் திருத்தி எழுதிய படிக்காத மேதை ஒருவர் உண்டென்னால் அது பெருந்தலைவர் காமராஜராகத்தான் இருக்க முடியும்.
இன்று தமிழகம் கல்வி, வெலைவாய்ப்பு என அனைத்திலும் வெற்றி நடை போடுகிறது என்றால் இது அனைத்திற்கும் அன்றே அடித்தளமிட்டவர் அவர். எத்தனை அரசியல் கட்சிகள் வந்தாலும் காமராஜர் ஆட்சியை தரவேண்டும் என்பதே ஒவ்வொருவரின் லட்சியமாக உள்ளது. அந்த அளவுக்கு கட்சி வேறுபாடின்றி மகத்தான தலைவராக, முன்மாதிராயான முதல்வராக இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான் தலைவர் காமராஜர் ஆவார். தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் அமைச்சராக இருந்தாலும், தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தமிழக மக்களே குடும்பம் என கருதி வாழ்ந்து மறைந்தவர் காமராஜர் என்பதுதான் அவரின் அழியாப் புகழுக்கு காரணம்.
காமராஜரின் பிறப்பு...
விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15 குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் மகனாகப் பிறந்தார் காமராஜர், இயற்பெயர் காமாட்சி, அது பின்னர் காமராஜ் ஆனது, தங்கை நாகம்மாள், தனது 6வது வயதிலேயே தந்தையை இழந்தார், இதனால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளானார், குடும்ப வறுமையை போக்க தனது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சென்றார் காமராஜர். அங்குதான் சுதந்திர போராட்ட வீரர்களின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு, தனது 14 வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் :-
தனது 16வது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், கள்ளுக் கடை போராட்டம் என பல போராட்டங்களில் பங்கெடுத்து ஒன்பது ஆண்டுகள் வரை சிறையில் அடைபட்டார் காமராஜர், 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் காமராஜர், சுதந்திரப் போராட்டக் களத்தில் அவர் காட்டிய வேகம், காங்கிரஸ் தலைவர்களை கவர்ந்தது. இதன் வெளிப்பாடாக 1952 இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1954 நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் இருக்கையை அலங்கரித்தார்.
அன்று முதல் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக மக்கள் பணியாற்றினார். தொண்டனுக்கு தொண்டனாக, எளியோர்க்கு எளியோராக மக்களின் தொண்டனாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். கல்வி அறிவு இல்லாதவர் என குதர்க்க புத்திக் காரர்களால் விமர்சிக்கப்பட்டாலும் தமிழகத்தில் 30 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்து தமிழகத்திற்கே கல்விக்கண் திறந்தார் கர்மவீரர் காமராஜர். அவர் ஆட்சிக்கு முன்பு வெறும் 7 சதவீதம் மட்டுமே இருந்த தமிழகத்தில் படித்தோர் நிலை, அவர் ஆட்சிக் காலத்தில் தான் முதன்முறையாக 37 சதவீதம் உயர்ந்தது. தற்போதுள்ள மதிய சத்துணவு திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என அனைத்தையும் அன்மே செய்து காட்டினார்.
காமராஜர் கே- பிளான் :-
தற்போதுள்ள அரசியல்வாதிகள் கிடைத்த பதவிகளை தக்க வைத்துக் கொள்ள இவர் தலையையும் வாங்க துணியும் நிலையில் அன்று தான் ஓய்வுபெறும் வயதில் இருப்பதை உணர்ந்த காமராஜர் கே- பிளான் (காமராஜ் பிளான்) என்ற திட்டத்தை வரையறுத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது அனுபவத்தை அர்ப்பணிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். அவரைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி எஸ்.கே பாட்டில். பிஜு பட்நாயக், ஜெகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய் போன்ற ஐந்து முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்.
இதையும் படியுங்கள்: மாடு மேய்த்த சிறுவன் கேட்ட ‘அந்த’ கேள்வி.! மதிய உணவு முதல் 16,000 பள்ளிகள் வரை - காமராஜரின் கல்வி பணிகள் !
காமராஜரின் மகத்தான திட்டங்கள் :
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளைப் போல் சாலை பொருத்தமானவர் கர்மவீரர் காமராஜர் தான். ஏன் என்றால் அவர் செய்த திட்டங்கள்தான் இன்றும் தமிழ்நாட்டில் அடையாளங்களாக உள்ளன. நாட்டில் விவசாயத்தை பெருக்குவது, நீர்த்தேக்கங்களை உருவாக்குவது, கல்வி வளர்ச்சியை உயர்த்துவது, தொழிற்சாலைகளை நிறுவுவது என அவர் இட்ட திட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்துவருகிறது.
இதையும் படியுங்கள்: காமராசர் என்ற படிக்காத மேதையின் அரசியல் சித்தாந்த தொலைநோக்கு பார்வை!!
கல்விக்கண் திறந்த காமராஜர் : படிக்காத மேதை காமராஜர் அவர்கள் நாட்டில் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்கு வருகை, கல்வி கற்கும் நிலை உயர்ந்தது. இன்று தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு முழுகாரணம் கர்மவீரர் காமராஜர் ஒரேவரே ஆவர். பள்ளியில் இலவச உணவு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம் திட்டம் தொடங்கி வைத்தவர் காமராஜர்.
அவர் ஆட்சிக் காலத்தில் தான் சாதி மத பேதமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி உறுதிசெய்யப்பட்டது. ஒரே நேரத்தில் 6 ஆயிரம் கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிக்கூடங்களை திறந்தார், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக கையேந்தி பிச்சை எடுக்கவும் தயார் என அறிவித்தார், தான் படிக்கவில்லை என்றாலும் பிரதேசம் படிக்க வேண்டும் என செயல்பட்டார். அனைவருக்கும் கல்வி என்ற சொத்தை கொடுத்து விட்டாலே வறுமை தன்னால் நின்று விடும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை மாடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் பள்ளிக்கு போகவில்லை என காமராஜர் கேட்க, பள்ளிக்கு வந்தால் எனக்கு சோறு யாரு போடுவது என கேட்க, அது காமராஜரை கடுமையாக பாதித்து விட்டது,
அதன்பிறகுதான் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் அவர், இதுவரையில் எந்த ஒரு தலைவரும் சிந்தித்தாக ஒன்றை சிந்தித்து அன்று அவர் செயல்படுத்தியதான் தான் இன்று தமிழகம் கல்வியுல் மேலோங்கி நிற்கிறது. அதனால்தான் காலத்தின் கடைசி கருணை காமராஜர் என கண்ணதாசன் அவரை மனமுறுகி பாடினார். மாடு பிடித்தவர்களை ஏடு பிடிக்க வைத்தவர் காமராஜர் என பலரும் கொண்டாடினர். எழுத்து அறிவித்தவன் இறைவன் என்பார்கள் அதுபோல கல்வி கண் திறந்தவர் காமராஜரும் ஒரு கடவுளை என்று இறைவனுக்கு நிகராக போற்றப்படக்கூடிய மகத்தான் தலைவரை காரமாஜர் காரமாஜர்.