இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், கச்சா எண்ணெய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆசிய கோப்பை 2025 செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:29 PM (IST) Sep 06
பழைய கார் வாங்க நினைக்கிறீர்களா? விலை, கடன், உத்தரவாதம், ஆவணங்கள் போன்ற 6 முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முழு விவரங்கள் இதோ.
10:17 PM (IST) Sep 06
கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய நிலையில் அவரது குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
09:57 PM (IST) Sep 06
அதிமுக கட்சி பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000 நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவியை துறந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
08:49 PM (IST) Sep 06
ஜெயலலிதாவி்ன் செல்லப்பிள்ளையாக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியல் களத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
07:51 PM (IST) Sep 06
தனது அதிருப்தியை வெளிப்படுத்திய காரணத்தால் அதிமுகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்போனில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
06:42 PM (IST) Sep 06
சனிக்கிழமை பாவகாட் பிரபலமான சக்திபீடத்தில் ரோப் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் மற்றும் லிஃப்ட் மேன் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
06:25 PM (IST) Sep 06
பிரஷ் பண்ண உடனே ஏன் தண்ணீர் குடிக்க கூடாது? அப்படி குடித்தால் என்ன ஆகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
06:25 PM (IST) Sep 06
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த காரணத்திற்காக செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் சிறுபிள்ளைத்தனமானது என விகே சசிகலா தெரிவித்துள்ளார்.
05:28 PM (IST) Sep 06
வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இங்கு பார்க்கலாம்.
04:56 PM (IST) Sep 06
உங்கள் தலை முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும் தயிர் ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
04:15 PM (IST) Sep 06
டிஜிபி அலுவலகத்தில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். திருமாவளவனை விமர்சித்ததால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
04:02 PM (IST) Sep 06
2025-ம் ஆண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
04:01 PM (IST) Sep 06
கார் விலை குறைவு: சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் சில பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. ஜிஎஸ்டி குறைப்பு ஹூண்டாய் கிரெட்டா விலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.
03:25 PM (IST) Sep 06
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை கண்டுபிடித்த முத்து, அவனை தன்னுடைய மாமியார் வீட்டிலேயே தங்க வைக்க முடிவு செய்கிறான்.
03:22 PM (IST) Sep 06
அதிமுக.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பாக இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் பெயரளவுக்கு கூட ஆலோசனை மேற்கொள்ளாத எடப்பாடியின் செயல் பல மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
03:20 PM (IST) Sep 06
தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்கு அதிகாரத்தைப் பறிப்பதாகவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே மாநாட்டின் நோக்கம் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
03:02 PM (IST) Sep 06
கீரையை சமைக்கும் சரியான முறையும், கீரை சமைக்கும்போது செய்யக் கூடாத தவறுகளையும் இங்கு காணலாம்.
02:47 PM (IST) Sep 06
சமைத்த உணவில் எண்ணெய் அதிகமாகி விட்டால் அதை சுலபமாக நீக்க சில சூப்பரான டிப்ஸ்கள் இங்கே.
02:39 PM (IST) Sep 06
கிருஷ் ஜாகர்லமூடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்திருந்த காட்டி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கி உள்ளது.
02:16 PM (IST) Sep 06
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதால் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.
02:08 PM (IST) Sep 06
நாங்கள் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, கருத்து பரிமாறியது, பொதுச்செயலாளர் இடத்திலேயே யார் வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்று அன்றைக்கு தெளிவுபடுத்தி இருந்தேன்.
01:47 PM (IST) Sep 06
அதிமுகவில் ஒன்றிணைப்பு கோரிக்கை வலுக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
01:38 PM (IST) Sep 06
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சேலஞ்சில் தோல்வி அடைந்து எலிமினேட் ஆனது யார் என்பதை பார்க்கலாம்.
01:31 PM (IST) Sep 06
எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.40,000 வரை கல்வி உதவித்தொகை பெறலாம். தகுதிகளைச் சரிபார்த்து செப் 22-க்குள் விண்ணப்பிக்கவும்.
01:28 PM (IST) Sep 06
பாஜக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியதற்கு தொண்டர்களின் விருப்பமே காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
01:24 PM (IST) Sep 06
"எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது எடப்பாடிக்குதான் பின்னடைவு''
01:24 PM (IST) Sep 06
கல்லூரி சேர்க்கைக்கான வாய்ப்பைத் தவறவிட்டீர்களா? இளநிலை, முதுநிலை மற்றும் பி.எட் படிப்புகளுக்கான விண்ணப்பம் செப் 30 வரை நீட்டிப்பு! அரசு கல்லூரிகளில் இப்போதே விண்ணப்பிக்கலாம்!
01:00 PM (IST) Sep 06
CBSE 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான IPS போர்டலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. CWSN மாணவர்களுக்கு தனி போர்டல் சலுகைகளை வழங்குகிறது.
12:56 PM (IST) Sep 06
12:49 PM (IST) Sep 06
உலகின் மிக விலையுயர்ந்த ஆடம்பர போன்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தங்கம் மற்றும் வைரங்களால் ஆன, கோடிக் கணக்கில் விலை கொண்ட 5 பிரீமியம் போன்கள் பற்றிய தகவல்கள்.
12:46 PM (IST) Sep 06
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல் பரவி வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
12:45 PM (IST) Sep 06
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, திருமாவளவனை விமர்சித்ததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரைத் தாக்கியுள்ளனர். டிஜிபி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12:39 PM (IST) Sep 06
செங்கோட்டையன் மீது தலைமை கழகத்தால் நீக்கப்பட்டது ஒரு தவறான முடிவு. அதற்கு பதிலாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கலாம்
12:38 PM (IST) Sep 06
மஞ்சள் ஆரோக்கியமானது என்றாலும், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்கவும் அவர்கள் யார் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
12:10 PM (IST) Sep 06
11:56 AM (IST) Sep 06
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கெடுவுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
11:49 AM (IST) Sep 06
துபாயில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் தெலுங்கு படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வெற்றியாளர் பட்டியலை பார்க்கலாம்.
11:33 AM (IST) Sep 06
செங்கோட்டையனின் கெடுவை ஏற்க முடியாமலும், அவரை நீக்க முடியாமலும் திக்கித்திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை எளிதாகவும், விஜய் தன் கட்சியை வலுப்படுத்தவும் தக்க தருணமாக மாறி வருகிறது.
11:25 AM (IST) Sep 06
அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிறார் செங்கோட்டையன். கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
11:12 AM (IST) Sep 06
சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு என்ன ஆனது என்கிற உண்மையை சக்தியிடம் கூறி இருக்கிறார் டாக்டர். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.