- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குக் வித் கோமாளியில் நடந்த எதிர்பாரா எலிமினேஷன்... வீட்டுக்கு நடையைகட்டிய அந்த போட்டியாளர் இவரா?
குக் வித் கோமாளியில் நடந்த எதிர்பாரா எலிமினேஷன்... வீட்டுக்கு நடையைகட்டிய அந்த போட்டியாளர் இவரா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சேலஞ்சில் தோல்வி அடைந்து எலிமினேட் ஆனது யார் என்பதை பார்க்கலாம்.

Cook With Comali 6 This Week Elimination
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே நான்கு பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் டாஸ்கில் 5-வதாக வெளியேறிய அந்த நபர் யார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த எலிமினேஷன் டாஸ்க் உமைர், ராஜு மற்றும் பிரியா ராமன் இடையே நடைபெற்றது.
குக் வித் கோமாளியில் ட்விஸ்ட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற எலிமினேஷன்கள் ஸ்கோர் போர்டில் யார் கம்மியான மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற குக்கிங்கின் முடிவில் உமைர் ஸ்கோர் போர்டில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், அவர் செய்த உணவு நடுவர்களுக்கு திருப்திகரமாக இல்லாததால் அவரை டேஞ்ஜர் ஜோனுக்கு தள்ளினர். அதேபோல் ராஜு மற்றும் பிரியா ராமனும் டேஞ்ஜர் ஜோனில் இடம்பெற்று இருந்தனர். இதில் உமைர் ஸ்கோர்படி எலிமினேஷன் செய்யச் சொன்னார். ஆனால் மற்ற இருவரும் குக்கிங் செய்து எலிமினேஷன் செய்ய சொன்னதால், மெஜாரிட்டி அடிப்படையில் குக்கிங் செய்து எலிமினேஷன் செய்ய நடுவர்கள் முடிவு செய்தனர்.
யார் எலிமினேட் ஆனது?
இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சேலஞ்ஜில், உமைர், ராஜு மற்றும் பிரியா ராமன் ஆகிய மூவருக்கும் ஆட்டு ஈரல் கொடுக்கப்பட்டது. அதில் ஏதாவது ஒரு உணவு செய்யச் சொன்னார்கள். இந்த டாஸ்கிலும் நடுவர்கள் ரகசிய அறையில் இருந்தபடி தான் டேஸ்டிங் செய்தனர். இதன் முடிவில் மூன்று பேரின் உணவும் சுவையாக இருந்ததாக சொன்ன நடுவர்கள், ராஜு மற்றும் பிரியா ராமனைக் காட்டிலும் உமைரின் உணவு சற்று கம்மி மதிப்பெண் பெற்றதால், இந்த வாரம் உமைர் எலிமினேட் ஆவதாக அறிவித்தனர். நடுவர்களின் இந்த முடிவு நடுநிலையானது இல்லை என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
டாப் 5 போட்டியாளர்கள்
இதன்மூலம் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்கள் உறுதியாகி இருக்கிறார்கள். அதன்படி லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தகுமார், ஷபானா, ராஜு, பிரியா ராமன் ஆகிய ஐந்து பேர் தான் தேர்வாகி இருக்கிறார்கள். இதில் இந்த வாரம் இவர்களுக்கு இடையே டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுபவர்கள் நேரடியாக பைனலுக்கு தேர்வாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் எலிமினேட் ஆன உமைர், வைல்டு கார்டு மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.