விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்காக ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கிராமத்து சமையல் சுற்று நடைபெற உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 6 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐந்து சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல ரக்ஷன் போட்டியின் தொகுப்பாளராக களமிறங்க, செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கௌசிக் ஆகியோர் நடுவர்களாக பங்கெடுத்துள்ளனர். கடந்த சீசனில் கலந்து கொண்ட கோமாளிகள் பலர் மாற்றப்பட்டு இந்த சீசனில் பல புது கோமாளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

போட்டியாளர்கள் யார்?

போட்டியாளர்களாக பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், மதுமிதா, உமைர் லத்தீஃப், ராஜூ ஜெயமோகன், ஷபானா, சுந்தரி அக்கா, கஞ்சா கருப்பு, நந்தகுமார், சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சௌந்தர்யா கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் சுற்றில் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். முன்பு எப்போதும் போல் இல்லாத வகையில் சீசன் 6-ல் லீடர் போர்டு வைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் அடிப்படையில் குக்குகளுக்கு ரேங்க் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வாரம் கிராமத்து விருந்து சுற்று

கடந்த இரண்டு சீசன்களாக குக் வித் கோமாளி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே சீசன் 6 மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த சீசன் பூர்த்தி செய்துள்ளது. முதல் சில வாரங்களிலேயே நிகழ்ச்சிக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. மூன்று எபிசோடுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பலர் நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டிருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் “கிராமத்து விருந்து” என்கிற பெயரில் போட்டி வைக்கப்பட்டுள்ளது.

நடுவர்கள் கொடுத்த டாஸ்க்

நவதானியங்களை பயன்படுத்தி உணவு சமைக்க வேண்டும் என்றும், மண்சட்டி அருவாள்மனை போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் என நடுவர்கள் கூறுகின்றனர். இந்த வார எபிசோடு எப்போதும் போல் கலாட்டா நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cooku with Comali 6 | 31st May & 1st June 2025 - Promo 1