வேகவைத்த முட்டை vs ஆம்லெட்: எது ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?
வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இங்கு பார்க்கலாம்.

Boiled gEgs or Omelette
முட்டை மிகவும் சத்தான உணவுகளில் ஒன்று. இதில் வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனால் தான் இதை சூப்பர் ஃபுட் என்று சொல்லுகிறோம். ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. எனவே தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. ஆனாலும் காலையில் முட்டை சாப்பிடும் போது வேகவைத்த முட்டை நல்லதா? அல்லது ஆம்லெட் நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பது இந்த பதிவில் பார்க்கலாம்.
வேகவைத்த முட்டை
வேக வைத்த முட்டையில் சுமார் 70 கிராம் மட்டுமே கல்லோரிகள் உள்ளன. எடையை குறைக்க அல்லது கொழுப்பை கரைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வேகவைத்த முட்டை ஜீரணிக்க மிக எளிதானது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதை சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
ஆம்லெட்
குறைந்த எண்ணெயை பயன்படுத்தி சாதாரணமாக ஆம்லெட் போட்டு சாப்பிடுட்டால் வேக வைத்த முட்டையை போலவே ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால் வெங்காயம், தக்காளி போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் கூடுதல் நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கும். இப்படி சாப்பிடுவது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், வயிறும் நீண்ட நேரம் நிரம்பி இருக்கும்.
எது பெஸ்ட்?
குறைந்த கலோரி கொழுப்பு இல்லாத காலை உணவை நீங்கள் சாப்பிட விரும்பினால் வேகவைத்த முட்டைதான் சிறந்த தேர்வு. மிகவும் சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட விரும்பினால் குறைந்த எண்ணெயில் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். உங்களது தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப முட்டையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மேலும் எப்படி சாப்பிட்டாலும் முட்டையில் இருக்கும் சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்களும், ஃபோலேட், செலினியமும் உள்ளன. அவை ஆரோக்கியமான கண் பார்வை, எலும்பு ஆரோக்கியம், மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன. இதனால்தான் நிபுணர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.