- Home
- உடல்நலம்
- Eggs During Fever : காய்ச்சல் இருக்கப்ப முட்டை சாப்பிடலாமா? இதுக்கு பின்னால் இவ்ளோ விஷயம் இருக்கா?
Eggs During Fever : காய்ச்சல் இருக்கப்ப முட்டை சாப்பிடலாமா? இதுக்கு பின்னால் இவ்ளோ விஷயம் இருக்கா?
காய்ச்சல் இருக்கும்போது முட்டை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Egg Benefits During Fever
முட்டை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. முட்டையில் நம் உடலுக்கு தேவையான புரதங்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், காய்ச்சல் இருக்கும் போது முட்டை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காய்ச்சலின் போது முட்டை சாப்பிடலாமா?
முட்டையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் கோடைகாலம் மற்றும் காய்ச்சல் இருக்கும் போது முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் நம்புகிறார்கள். கோடைகாலத்தில் முட்டை சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு, முகப்பரு பிரச்சனைகள் ஏற்படும் தவறான கருத்து நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதுபோல காய்ச்சல் இருக்கும் போதும் முட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு கருத்துக்கும் இதுவரை எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.
காய்ச்சலின் போது முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?
காய்ச்சல் இருக்கும் போது முட்டை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் காய்ச்சல் சமயத்தில் நம் உடலானது ரொம்பவே பலவீனமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலிமையை தரும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் வேக வைத்த முட்டை தான் சாப்பிட வேண்டும். முட்டையை பச்சையாகவோ அல்லது ஆம்லெட் வடிவில் சாப்பிடக்கூடாது. இல்லையெனில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் முட்டையில் சால்மோனெல்லா பாக்டீரியாவால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளன.
காய்ச்சல் இருக்கும்போது இந்த உணவுகளையும் சாப்பிடுங்கள் :
பொதுவாக காய்ச்சல் சமயத்தில் கஞ்சி, இட்லி போன்ற எளிதான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று காலம் காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் போது அதிக கலோரிகள் புரதம் மற்றும் திரவங்கள் கொண்ட உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில் காய்ச்சல் இருக்கும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதை சரி செய்ய புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.