- Home
- Lifestyle
- Eggs in Fridge : முட்டையை பிரிட்ஜில் சேமித்து வைப்பவரா நீங்க? வைச்சா என்னாகும் தெரியுமா?
Eggs in Fridge : முட்டையை பிரிட்ஜில் சேமித்து வைப்பவரா நீங்க? வைச்சா என்னாகும் தெரியுமா?
முட்டை கெட்டுப்போகாமல் இருக்க பலர் பிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் அப்படி வைப்பது நல்லதா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.

முட்டை எளிதில் கிடைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட். பெரும்பாலும் இது அனைவரது வீட்டிலும் ஸ்டாக்காக இருக்கும். முட்டை கெட்டுப் போகாமல் இருக்க பலர் ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் அப்படி வைப்பது உண்மையில் நல்லதா? இதுக்கு குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இறைச்சியில் இருக்கும் சால்மொனெல்லா என்ற பாக்டீரியா முட்டையின் ஓட்டியிலும் ஒட்டியிருக்கும். நாம் சாப்பிடும் உணவில் இந்த பாக்டீரியா கலந்துவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வாந்தி ,பேதி, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவக்குக்கும்.
முட்டை ஓட்டில் இருக்கும் பாக்டீரியாவை அழிக்க தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். ஆனால் அப்படி கொதிக்க வைத்த முட்டையை சேமித்து வைக்க முடியாது. ஒருவேளை அப்படி வைத்தாலும் நமக்கே தெரியாமல் அந்தக் கிருமிகள் மற்ற உணவுகளில் பரவி விடும்.
அதற்கு பதிலாக முட்டையை கழுவி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இப்படி வைத்தால் பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆனால் பிரிட்ஜில் வைத்த முட்டையை வெளியே நீண்ட நேரம் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை மற்ற முட்டைகளை காட்டிலும் அவற்றில் சீக்கிரமாகவே தொற்றுக்கள் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளன.
முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது 4 டிகிரி செல்சியத்திற்கு கீழ் வெப்பநிலை இருக்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் முட்டை கெடாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும். அதுபோல முட்டைய பிரிட்ஜில் வைக்கும் போது அதன் கூண்டு பகுதி கீழாக இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே இருக்கும் மஞ்சள் நிலையாக இருக்கும். முட்டையை டப்பாவில் வைத்து சேமிப்பதை தவிர்க்க வேண்டும்.