- Home
- Cinema
- சைமா விருதுகள் 2025 : போட்டிபோட்டு விருதுகளை தட்டிதூக்கிய கல்கி மற்றும் புஷ்பா 2 - முழு வின்னர் லிஸ்ட் இதோ
சைமா விருதுகள் 2025 : போட்டிபோட்டு விருதுகளை தட்டிதூக்கிய கல்கி மற்றும் புஷ்பா 2 - முழு வின்னர் லிஸ்ட் இதோ
துபாயில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் தெலுங்கு படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வெற்றியாளர் பட்டியலை பார்க்கலாம்.

SIIMA Awards 2025 Full Winner List
துபாய் கண்காட்சி மையத்தில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2025) விழா சிறப்பாக நடைபெற்றது. தெலுங்கு மற்றும் கன்னடத் துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சைமா விருதுகள் (SIIMA) 2025 விழாவில் தெலுங்கு சினிமா மீண்டும் சாதனை படைத்தது. புஷ்பா 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள் அதிக விருதுகளை வென்று அசத்தின. கல்கி 2898 AD சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
சைமா விருதுகள்
அதேபோல் புஷ்பா 2 படத்தில் நாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர் விருதை வென்றார். சிறந்த நடிகையாக ராஷ்மிகா மந்தனா (புஷ்பா 2) தேர்வு செய்யப்பட்டார். புஷ்பா 2: தி ரூல் படத்தின் இயக்குனர் சுகுமார் சிறந்த இயக்குனர் விருதை தட்டிச் சென்றார். ஹனுமான் படத்திற்காக பிரசாந்த் வர்மா விமர்சகர்களின் சிறந்த இயக்குனர் விருதையும், அதே படத்தில் நடித்த தேஜா சஜ்ஜா விமர்சகர்களின் சிறந்த நடிகர் விருதையும் வென்றனர். இதில் புஷ்பா 2 : தி ரூல் திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், கல்கி 2898 AD படத்திற்கு நான்கு விருதுகளும் கிடைத்தன
SIIMA விருதுகள் 2025 வெற்றியாளர்கள் முழு பட்டியல்:
சிறந்த படம் – கல்கி 2898 AD (வையஜந்தி மூவிஸ்)
சிறந்த இயக்குனர் – சுகுமார் (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த இயக்குனர் (விமர்சகர்கள்) – பிரசாந்த் வர்மா (ஹனுமான்)
சிறந்த நடிகர் – அல்லு அர்ஜுன் (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) – தேஜா சஜ்ஜா (ஹனுமான்)
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த நடிகை (விமர்சகர்கள்) – மீனாட்சி சவுத்ரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த துணை நடிகர் – அமிதாப் பச்சன் (கல்கி 2898 AD)
சிறந்த துணை நடிகை – அன்னா பென் (கல்கி 2898 AD)
சைமா விருது வென்றவர்கள் பட்டியல்
சிறந்த இசையமைப்பாளர் – தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த பாடலாசிரியர் – ராமஜோகய்ய சாஸ்திரி (சுட்டமல்லி – தேவரா)
சிறந்த ஆண் பின்னணி பாடகர் – சங்கர் பாபு கந்துகூரி (பீலிங்ஸ் – புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த பெண் பின்னணி பாடகி – சில்பா ராவ் (சுட்டமல்லி – தேவரா)
சிறந்த வில்லன் – கமல் ஹாசன் (கல்கி 2898 AD)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரத்னவேல் (தேவரா)
சிறந்த அறிமுக நடிகை – பங்கூரி பாக்யஸ்ரீ போர்சே (மிஸ்டர் பச்சன்)
சிறந்த அறிமுக நடிகர் – சந்தீப் சரோஜ் (கமிட்டி குர்ரோலு)
சிறந்த அறிமுக இயக்குனர் – நந்தகிஷோர் எமனி (35 ஒரு சின்ன கதை)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் – நிஹாரிகா கொனிடெலா (கமிட்டி குர்ரோலு)
சிறந்த நகைச்சுவை நடிகர் – சத்யா (மாத்து வதலரா 2)