குந்தவை திரிஷா முதல் ஏஜெண்ட் டீனா வசந்தி வரை சைமா விருதுகளை வென்றுகுவித்த பிரபலங்கள் - முழு வின்னர் லிஸ்ட் இதோ
துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கமல்ஹாசனின் விக்ரமும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனும் போட்டிபோட்டு விருதுகளை அள்ளிச்சென்றன.
SIIMA 2023 full winners List
சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா இந்த ஆண்டு துபாயில் நடத்தப்பட்டது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விருது வென்ற தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை பார்க்கலாம்.
சிறந்த இயக்குனர் - லோகேஷ் கனகராஜ்
சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை லோகேஷ் கனகராஜ் வென்றார். விக்ரம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சாதனையாளர் விருது - மணிரத்னம்
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனராக வலம் வரும் மணிரத்னத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதோடு சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு கிடைத்தது.
சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன்
சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை பிரதீப் ரங்கநாதன் பெற்றார். கடந்தாண்டு லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
சிறந்த அறிமுக நடிகை - அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை வென்றார். விருமன் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை - திரிஷா
சிறந்த நடிகைக்கான சைமா விருதை நடிகை திரிஷா தட்டிச்சென்றார். பொன்னியின் செல்வன் 1 படத்தில் குந்தவையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திரிஷாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த அறிமுக இயக்குனர் & சிறந்த நடிகர் - மாதவன்
நடிகர் மாதவனுக்கு இரண்டு சைமா விருதுகள் கிடைத்தன. ராக்கெட்ரி படத்தை இயக்கியதற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு சைமா விருதுகளை மாதவன் வென்றார்.
சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி
சிறந்த கலை இயக்குனருக்கான சைமா விருது தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த பாடகர் & சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
விக்ரம் படத்தில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு 2 சைமா விருதுகள் வழங்கப்பட்டன. அப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை பாடியதற்காக சிறந்த பாடகருக்கான விருதும், சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதும் கமலுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... பசுபதியின் நாயகிக்கு பிறந்தநாள்.. நாட்டாமையோடு சென்று வாழ்த்து சொன்ன ராதிகா - இணையத்தில் போட்டோஸ் வைரல்!
சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகிபாபு
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான சைமா விருது யோகிபாபுவுக்கு வழங்கப்பட்டது. லவ் டுடே படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா
சிறந்த வில்லன் நடிகருக்கான சைமா விருது எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. டான் படத்திற்காக அவர் இந்த விருதை தட்டிச் சென்றார்.
சிறந்த துணை நடிகர் - காளி வெங்கட்
சிறந்த துணை நடிகருக்கான சைமா விருது நடிகர் காளி வெங்கட்டுக்கு வழங்கப்பட்டது. சூர்யா தயாரித்த கார்கி படத்திற்காக அவர் இவ்விருதை பெற்றார்.
சிறந்த துணை நடிகை - வசந்தி
சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது நடிகை வசந்திக்கு வழங்கப்பட்டது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன்
சிறந்த பாடலாசிரியருக்கான சைமா விருது இளங்கோ கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடலை எழுதியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சைமா விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை (கன்னடம்) - ஸ்ரீநிதி ஷெட்டி
கன்னடத்தில் சிறந்த நடிகைக்கான சைமா விருதை ஸ்ரீநிதி ஷெட்டி பெற்றார். கே.ஜி.எப் 2 படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் (தெலுங்கு) - ஜூனியர் என்.டி.ஆர்
தெலுங்கில் சிறந்த நடிகருக்கான சைமா விருது ஜூனியர் என்.டி.ஆருக்கு வழங்கப்பட்டது. ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த நடிகை (தெலுங்கு) - மிருணாள் தாக்கூர்
தெலுங்கில் சிறந்த நடிகைக்கான சைமா விருதை நடிகை மிருணாள் தாக்கூர் தட்டிச்சென்றார். சீதா ராமம் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
காந்தாராவுக்கு 10 விருதுகள்
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன காந்தாரா திரைப்படத்திற்கு மொத்தம் 10 சைமா விருதுகள் கிடைத்தன.
இதையும் படியுங்கள்... தம்பின்னு சொன்னது ஒரு குத்தமா?.. மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - கொதித்துப்போயிருக்கும் ரசிகர்கள்