அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் அதிரடி – வெற்றியோடு 2ஆவது இடத்திற்கு சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 69ஆவது லீக் போட்டி ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 214 ரன்கள் குவித்தது.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
பிராப்சிம்ரன் சிங் மற்றும் அதர்வா டைடு இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் குவித்தனர். இதில், அதர்வா டைடு 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
ரிலீ ரோஸோவ் 49 ரன்களில் வெளியேற ஷஷாங்க் சிங் 2 ரன்னில் ரன் அவுட்டானார். அஷுதோஷ் சர்மா 2 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கேப்டன் ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 32 ரன்கள் எடுத்தார்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 214 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
ஆனால், ராகுல் திரிபாதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா தனது மற்றொரு அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 28 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து நிதிஷ் ரெட்டி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து ஓரளவு தாக்குப் பிடித்தனர்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
நிதிஷ் ரெட்டி 37 ரன்னிலும், கிளாசென் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது 3 ரன்களில் வெளியேறினார். இறுதியாக அப்துல் சமாத் 11 ரன்கள் மற்றும் சன்வீர் சிங் 6 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
இந்த சீசனில் மட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 160 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபிஷேக் சர்மா 41 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஹென்ரிச் கிளாசென் 33 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்தப் போட்டியில் 214 ரன்களை சேஸ் செய்ததன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2ஆவது முறையாக அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.