Iran : ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - என்ன நடந்தது? முழு விவரம் இதோ!

Ebrahim Raisi : ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று சிறு விபத்தில் சிக்கியதாக தகவல்கள் இப்பொது வெளியாகியுள்ளது.

Iran President Ebrahim Raisi helicopter had a hard landing rescue team in action ans

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இன்று மே 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கும்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் என்ற செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானிய அரசு நடத்தும் செய்தி நிறுவனங்கள் இந்த சம்பவம் குறித்து இன்னும் எந்தவித தகவலையும் விவரிக்கவில்லை. மற்றும் பிற ஈரானிய ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து முரண்பாடான அறிக்கைகளை வழங்கி வருகின்றது. ஆகையால் ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை.

இரவை பகலாக்கிய விண்கல்: வைரல் வீடியோ!

உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் சம்பவத்தை விவரிக்க ஹெலிகாப்டர் "விபத்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், ஆனால் அரசாங்க அதிகாரிகள் அந்த சம்பவம் நடந்த அந்த இடத்தை இன்னும் அடையவில்லை என்று ஈரானிய நிருபர்களிடம் ஒப்புக்கொண்டார்.

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடுமையான தரையிறங்குதலை எதிர்கொண்டதாகவும், மீட்புக் குழுக்கள் அந்த இடத்திற்குச் சென்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜர்பைஜான் தேசத்தின் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

யார் இந்த கோபிசந்த்? பிரிட்டன் பணக்காரர்களில் முதலிடம்! சொத்து எவ்வளவுன்னு பாருங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios