MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • USA Salary : அமெரிக்காவில் பாத்ரூம் கழுவினாலே கோடீஸ்வரர் ஆகிடலாமா? அட்ரா சக்கை!

USA Salary : அமெரிக்காவில் பாத்ரூம் கழுவினாலே கோடீஸ்வரர் ஆகிடலாமா? அட்ரா சக்கை!

USA Salary : அமெரிக்காவில் கழிவறைகளைக் கழுவினால் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்குமா? கோடீஸ்வரர்கள் ஆகிவிட முடியுமா? அமெரிக்காவில் உடல் உழைப்பு வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? செலவுகள் எப்படி இருக்கும்? மாதந்தோறும் எவ்வளவு மிச்சமாகும்?

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 06 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அமெரிக்காவில் பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
Image Credit : Chatgpt

அமெரிக்காவில் பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?

அமெரிக்காவில் (USA) சாஃப்ட்வேர் ஊழியர்கள், மருத்துவர்களின் சம்பளம் பற்றி மட்டுமல்லாமல், டெலிவரி பாய்ஸ், பாத்ரூம் அல்லது பில்டிங் கிளீனர்கள் போன்ற புளூ காலர் (Blue Collar) தொழிலாளர்களின் வருமானம் குறித்தும் தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து அங்கு சென்று கிளீனிங் வேலை செய்பவர்கள் மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர்களின் வருமானம் லட்சங்களில் இருக்குமா? அவர்களின் செலவுகள் போக எவ்வளவு மிச்சமாகும்? போன்ற விவரங்களை அதிகாரப்பூர்வ தரவுகள் மற்றும் யூடியூபர்களின் (YouTubers) தகவல்களின் அடிப்படையில் பார்ப்போம்.

இதையும் படிங்க : Rice Water : அரிசி கழுவிய நீரை வீணாக கொட்டுறீங்களா? இதுக்கு எவ்வளவு பயன்பாடுகள் இருக்குனு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மணிநேரக் கணக்கில் ஊதியம் வழங்கப்படும்.
Image Credit : Gemini AI

மணிநேரக் கணக்கில் ஊதியம் வழங்கப்படும்.

அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகத்தின் (U.S. BLS) படி, அங்கு கிளீனிங் வேலை செய்பவர்களுக்கு மணிநேர அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு $15 முதல் $18 டாலர்கள் வரை, அதாவது சுமார் 1800 ரூபாய் வரை கிடைக்கும். இது வேலையின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம். இதன் மூலம், ஒரு ஆண்டில் அவர்களின் சராசரி வருமானம் சுமார் $40,000 டாலர்கள், அதாவது கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய். ஆனால், இந்த வருமானம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.

இதையும் படிங்க : Kubera-Vidya Yoga : பணத்தை அள்ளித் தரப்போகும் புதன் பெயர்ச்சி! இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு ராஜ வாழ்க்கை!

Related Articles

Related image1
USA Salary: அமெரிக்காவில் மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்! செலவு போக கையில் எவ்வளவு மிஞ்சும் தெரியுமா?
Related image2
Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
35
நைட் ஷிஃப்ட்கள் / ஆஃபீஸ் கிளீனிங்
Image Credit : Gemini AI

நைட் ஷிஃப்ட்கள் / ஆஃபீஸ் கிளீனிங்

அமெரிக்காவில் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்களில் இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு $20 டாலர் வரை சம்பளம் கிடைக்கிறது. அங்கு 'பாத்ரூம் கிளீனிங்' என்பது ஒரு தனி வேலையாக இல்லாமல், "கட்டிடப் பராமரிப்பு சேவைகளின்" (Janitorial & Building Cleaning Services) ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் பல இந்திய யூடியூபர்கள், தங்களது வீடியோக்களில் இந்த மணிநேர ஊதிய முறையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : Hotel Mirrors : ஹோட்டல் பெட்டுக்கு எதிரே கண்ணாடி ஏன்? இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?

45
ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
Image Credit : Gemini AI

ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?

அமெரிக்காவில் மணிநேரக் கணக்கில் வேலை செய்பவர்கள், ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வேலை செய்தால், $120 முதல் $160 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இந்த கணக்குப்படி, மாத வருமானம் சுமார் $3,000 முதல் $4,000 டாலர்கள் வரை இருக்கும். இது இந்திய மதிப்பில் சுமார் ₹3.3 லட்சம். கூடுதல் பணம் தேவைப்படுபவர்கள் ஓவர்டைம் (Overtime) செய்வார்கள். வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், கூடுதல் நேரத்திற்கு 1.5 மடங்கு சம்பளம் கிடைக்கும். இதன் மூலம் சிலர் மாதம் 5 லட்சம் வரை கூட சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!

55
எந்த வேலைக்கும் மரியாதை உண்டு..
Image Credit : Asianet News

எந்த வேலைக்கும் மரியாதை உண்டு..

அமெரிக்காவில் வருமானம் அதிகம் என்றாலும், வாழ்க்கைச் செலவும் (Cost of Living) அதிகம். தனியாக வசிக்கும் ஒரு கிளீனிங் தொழிலாளியின் மாதச் செலவுகள்: வாடகை (பகிர்வு அறை) $500 (சுமார் 40-50 ஆயிரம் ரூபாய்), உணவு மற்றும் மளிகை $400 (30 ஆயிரத்திற்கும் மேல்), போக்குவரத்து, மொபைல், ஹெல்த் இன்சூரன்ஸ் என மற்ற செலவுகளையும் சேர்த்தால் மாதம் 2 முதல் 3 லட்சம் வரை செலவாகும். மாதம் $3,500 சம்பாதிக்கும் ஒருவர், வரிகள் மற்றும் இந்தச் செலவுகள் போக, சுமார் 2 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். சரியாகத் திட்டமிட்டு ஓவர்டைம் செய்தால், ஆண்டிற்கு 25 லட்சம் வரை சேமிக்கலாம். அமெரிக்காவில் எந்த வேலையையும் தாழ்வாகப் பார்ப்பதில்லை (Dignity of Labor). உழைப்பை நம்பினால், கிளீனிங் வேலை மூலமும் நல்ல வருமானம் ஈட்டலாம்.

இதையும் படிங்க : OYO Rules : கல்யாணம் ஆகாத ஜோடி OYO ரூமில் தங்குவது குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது?

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
சம்பளம்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Most Dangerous Countries: தனியா ஊர் சுத்தப் போறீங்களா? இந்த நாடு ரொம்ப டேஞ்சர்! முழு லிஸ்ட் உள்ளே
Recommended image2
New Planet: பூமி போன்ற உயிரினங்கள் எங்கே? புதிய ஆய்வு சொல்வது என்ன?
Recommended image3
UK Cost of Living: ஒரு கிலோ வெண்டைக்காய் ₹1000-ஆ? UK-வில் காய்கறி விலையை கேட்டா மயக்கமே வந்திடும்!
Related Stories
Recommended image1
USA Salary: அமெரிக்காவில் மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்! செலவு போக கையில் எவ்வளவு மிஞ்சும் தெரியுமா?
Recommended image2
Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved