MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Most Dangerous Countries: தனியா ஊர் சுத்தப் போறீங்களா? இந்த நாடு ரொம்ப டேஞ்சர்! முழு லிஸ்ட் உள்ளே

Most Dangerous Countries: தனியா ஊர் சுத்தப் போறீங்களா? இந்த நாடு ரொம்ப டேஞ்சர்! முழு லிஸ்ட் உள்ளே

Most Dangerous Countries: 2026-ல் தனியாகப் பயணம் செய்ய பாதுகாப்பான மற்றும் ஆபத்தான நாடுகளின் பட்டியலை ஸ்கொயர்மவுத் நிறுவனம் வெளியிட்டுள்ளது. . குறிப்பாக முதல் முறையாக சோலோ டிராவல் செல்லும் பயணிகளுக்கு இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 26 2026, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தனியாகப் பயணம் செய்வதற்கு ஆபத்தான நாடுகள்
Image Credit : ChatGPT

தனியாகப் பயணம் செய்வதற்கு ஆபத்தான நாடுகள்

உலகம் முழுவதும் சோலோ டிராவல் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அல்லாமல், தனியாகப் பயணம் செய்து புதிய இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் அனுபவங்களை அறிந்து கொள்ள பலர் விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய பயணங்களில் பாதுகாப்பு மிக முக்கியமான அம்சமாக இருப்பதால், எந்த நாட்டைத் தேர்வு செய்கிறோம் என்பது பயண அனுபவத்தை தீர்மானிக்கக்கூடிய காரணியாக மாறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தனியாகப் பயணம் செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான 10 நாடுகள்
Image Credit : Getty

தனியாகப் பயணம் செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான 10 நாடுகள்

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டிராவல் இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஸ்கொயர்மவுத், 2026-ஆம் ஆண்டுக்கான சோலோ டிராவல் பாதுகாப்பு தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐரோப்பாவின் சிறிய நாடான சான் மரினோ, 0.78 என்ற மிகக் குறைந்த ரிஸ்க் இன்டெக்ஸுடன் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சோலோ டிராவல் நாடாக முதலிடம் பெற்றுள்ளது. அன்டோரா இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து ஆஸ்திரியா, செக் குடியரசு, கத்தார், எஸ்டோனியா, புருனே, டென்மார்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஆகஸ்டில் இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு காத்திருக்கிறது!

Related Articles

Related image1
Now Playing
மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
Related image2
டைகர் ஹில் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை.. தோள் கொடுத்த இஸ்ரேல்.. கார்கில் தந்த வரலாற்று பாடம்!
35
பாதுகாப்புத் தரவரிசை
Image Credit : Getty

பாதுகாப்புத் தரவரிசை

இந்த நாடுகள் உயர்ந்த தரவரிசை பெற முக்கிய காரணங்களாக பாதுகாப்பான பொதுச் சூழல், தரமான சுகாதார அமைப்பு, சிறந்த உள்கட்டமைப்பு, வேகமான இணைய சேவை மற்றும் அமைதியான சமூக சூழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரத்திலும் மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியும் என்ற நம்பிக்கை, இந்த ஆய்வில் முக்கிய மதிப்பீட்டு அம்சமாக உள்ளது.

45
மிகவும் ஆபத்தான நாடு
Image Credit : social media

மிகவும் ஆபத்தான நாடு

மறுபுறம், சோலோ டிராவலர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக வெனிசுலா குறிப்பிடப்பட்டுள்ளது. 9.74 என்ற அதிக ரிஸ்க் இன்டெக்ஸைப் பெற்றுள்ள அந்த நாட்டில் பாதுகாப்பு குறித்த அச்சம், சுகாதார வசதிகள் உள்ள சவால்கள் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பெரு, காபோன், கொலம்பியா, பொலிவியா, ஜமைக்கா, கயானா, ஈக்வடார், டிரினிடாட் மற்றும் டொபாகோ, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த 4 வீரர்களுக்கும் இந்த கெட்ட பழக்கம் இருக்கா! கேமராவில் வசமாக சிக்கிய தருணங்கள்

55
வெளிநாட்டு பயணம்
Image Credit : Getty

வெளிநாட்டு பயணம்

ஸ்கொயர்மவுத் வெளியிட்டுள்ள இந்த தரவரிசை, உலக அமைதிக் குறியீடு, சுகாதாரக் குறியீடு, இரவு நேர பாதுகாப்பு உணர்வு, மருத்துவமனை வசதிகள், மொபைல் இணைய வேகம் மற்றும் உலக இடர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரவுகளின் அடிப்படையில் குறியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, சோலோ டிராவல் திட்டமிடுபவர்கள் சுற்றுலா இடங்களின் அழகை மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் அவசரகால வசதிகளையும் கருத்தில் கொண்டு பயண முடிவுகளை எடுப்பது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பயணம்
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Planet: பூமி போன்ற உயிரினங்கள் எங்கே? புதிய ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
UK Cost of Living: ஒரு கிலோ வெண்டைக்காய் ₹1000-ஆ? UK-வில் காய்கறி விலையை கேட்டா மயக்கமே வந்திடும்!
Recommended image3
Green Chilli Price : 100 கிராம் மிளகாய் 400 ரூபாயா? பாவம் இந்த மக்கள்! வைரலாகும் வீடியோ!
Related Stories
Recommended image1
Now Playing
மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
Recommended image2
டைகர் ஹில் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை.. தோள் கொடுத்த இஸ்ரேல்.. கார்கில் தந்த வரலாற்று பாடம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved