தம்பின்னு சொன்னது ஒரு குத்தமா?.. மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - கொதித்துப்போயிருக்கும் ரசிகர்கள்
பிரபல நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் அவர்களுக்கு, சில விஜய் ரசிகர்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலிகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Director Mysskin
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் உள்பட இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பல இயக்குனர்களும் நடித்துள்ள நிலையில், பிரபல இயக்குனர் மிஸ்கின் அவர்களும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samantha: ஷாருக்கான் மிஸ் ஆன என்ன.. சல்மான்கானுடன் ஜோடி சேர போகும் சமந்தா? வேற லெவல் அப்டேட்!
Lokesh Kanagaraj
பொதுவாகவே இயக்குனர் மிஷ்கின், ஒருமையில் பேசும் பழக்கம் கொண்டவர், ஆனால் இது அவர், மற்றவர்கள் மீது கொண்ட அதீத அன்பினாலும் அல்லது அதீத கோவத்தினாலும் அவர் பேசுகின்ற வார்த்தைகள் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் நன்கு அறிந்ததே. ஏன் தமிழக மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் இது புதிய விஷயமும் கிடையாது.
Mysskin and Vijay
இந்நிலையில் லியோ திரைப்படத்தில் அவர் நடித்திருப்பதால் அவர் செல்லும் இடமெங்கும் லியோ திரைப்படத்திற்கான அப்டேட் குறித்து அவரிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பல பிரபலங்கள் லியோ திரைப்படத்தை பார்த்து முடித்துள்ள நிலையில், அதே கேள்வி மிஸ்கின் அவர்களிடமும் முன் வைக்கப்பட்டது.
Mysskin death poster
அப்பொழுது, தம்பி விஜய் இந்த படத்தை பார்த்து விட்டான் என்று நினைக்கிறேன், அவனுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. ஆகையால் படம் நன்றாக இருக்கும் என்று, ஒருமையில் அவர் பேசிய நிலையில், அவர் எங்கள் தளபதியை எப்படி இப்படி ஒருமையில் பேசலாம் என்று கூறி. சில விஜய் ரசிகர்கள் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். 15.9.2023 அன்று நடிகர் திரு. மிஸ்கின் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்று சில போஸ்டர்களை நம்மால் பார்க்கமுடிகிறது.