உங்கள் தலை முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும் தயிர் ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கத்தால் பலரும் பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் முடி சார்ந்த பிரச்சினைகள். ஊட்டச்சத்து இல்லாமை, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் முடி உடைதல், உதிர்தல், வறட்சியாகுதல் போன்ற முடி சார்ந்த ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைகளை குறைக்க பலரும் கடைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த பொருட்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் ரசாயனங்கள் கலந்து இருப்பதால் அவை முடியின் ஆரோக்கியத்திற்கு தீங்கை தான் விளைவிக்கும்.

ஆனாலும் சில இயற்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த முடி சார்ந்த பிரச்சனைகளை சுலபமாக தவிர்த்து விடலாம் குறிப்பாக எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு பொருள்தான் தயிர். இதில் புரதம், லாக்டிக் அமிலம் போன்றவை உள்ளதால் அவை கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது. இந்த பதிவில் தயிரைக் கொண்டு ஹேர் மாஸ் தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.

1. தயிர் மாஸ்க்

தயிரில் புரதம் மற்றும் குளிர்ச்சியான பண்புகள் உள்ளதால் அவை முடியை வலுப்படுத்தவும், பட்டு போல மென்மையாக மாற்றவும் உதவுகிறது. இதற்கு தயிரை உச்சந்தலை முதல் நுனிவரை நேரடியாக தழுவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு சூடான நீரில் குளிக்க வேண்டும். இந்த தயிர் ஹேர் மாஸ்க் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மற்ற உதவும்.

2. தயிர் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க் முடி உடையக்கூடியவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். இந்த ஹேர் மாஸ் தயாரிக்க அரை கப் தயிருடன் ஒரு முட்டை சேர்த்து நன்றாக கலந்து உச்சந் தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் குளிக்கவும் இந்த ஹேர் மாஸ்க் கூந்தலை பளபளப்பாக மாற்றும்.

3. தயிர் மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க் :

முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஹேர் மாஸ்க் சிறந்த தேர்வு. இந்த ஹேர்மஸ் தயாரிக்க 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை அதை பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் அரை கப் தயிர் கலந்து அதை உச்சந்தலை முதல் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் குழிக்க வேண்டும். வெந்தயம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த ஹேர் மாஸ் முடியை உதிர்வதை குறைத்து, அடர்த்தியாக்கும்.

4. தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய்

இந்த ஹேர் மாஸ் தயாரிக்க ஒரு கப் தயிரில் தேங்காய் எண்ணெய் கலந்து அதை தலையில் நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசவும். இந்த ஹேர் மாஸ் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

5. தயிர் மற்றும் கற்றாழை

இந்த ஹேர் மாஸ் தயாரிக்க ஒரு கப் தயிரில் கற்றாழை ஜெல்லை கலந்து அதை உச்சந்தலை முதல் நுனிவரை தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு மையல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும், சில்க்கியாகவும் மாறும்.