- Home
- Lifestyle
- Kitchen Tips : குழம்பில் எண்ணெய் அதிகமாகிட்டா? அப்ப இந்த ட்ரிக் ட்ரை பண்ணா உடனே நீக்கலாம்
Kitchen Tips : குழம்பில் எண்ணெய் அதிகமாகிட்டா? அப்ப இந்த ட்ரிக் ட்ரை பண்ணா உடனே நீக்கலாம்
சமைத்த உணவில் எண்ணெய் அதிகமாகி விட்டால் அதை சுலபமாக நீக்க சில சூப்பரான டிப்ஸ்கள் இங்கே.

Kitchen Hacks To Reduce Oil In Food
சமையலில் எவ்வளவு பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் சில சமயங்களில் தவறுகள் நடக்க தான் செய்யும். சில சமயம் உப்பு, காரம் அதிகமாயிடும். அதை சரி செய்வதற்கு உருளைக்கிழங்கு அல்லது வேறு ஏதாவது போட்டு சமாளித்து விடுவோம். ஆனால் எண்ணெய் அதிகமாகிவிட்டால் அவ்வளவுதான் எல்லா முடிஞ்சு! ஒன்றுமே செய்ய முடியாது. இதுபோல நீங்கள் வைக்கும் கூட்டு, கிரேவி, குழம்பு, பொரியலில் எண்ணிய அதிகமாகிவிட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? கவலைய விடுங்க..இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஐஸ் கட்டிகள்
நீங்கள் வைக்கும் குழம்பு வகைகளில் எண்ணெய் அதிகமானால் அதை சரி செய்ய ஒரு குழிக் கரண்டியில் 4-5 ஐஸ் கட்டிகளை போட்டு அந்த கரண்டியை குழம்புக்கு மேலே மிதக்கும் என்னை பகுதியில் மெல்லமாக விடவும். ஐஸ் கட்டிகள் குழம்பு மீது மிதக்கும் எண்ணெயை மட்டும் உறிஞ்சிவிடும்.
பொரியலில் எண்ணெய்
பொதுவாக பொறியியலில் எண்ணெய் அதிகமானால் அது கடாயின் நடுவில் தான் இருக்கும். அப்படி இருக்கும் எண்ணெயை உறிஞ்சுவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் அதையும் வெளியே எடுக்க ஒரு கிண்ணம் போதும். இதற்கு கடாயில் இருக்கும் காய்கறிகளை நடுப் பகுதியில் மட்டும் காலியாக வைத்து விட்டு வட்ட வடிவில் விலக்கி வைக்கவும். இப்போது கடாயின் நடுப்பகுதியில் ஒரு கிண்ணத்தை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 10 பத்து நிமிடங்கள் காத்திருக்கவும் காய்கறிக்குள் இருக்கும் மொத்த எண்ணெயும் கடாய் நடுப்பகுதிக்கு வந்துவிடும். பிறகு கரண்டியை கொண்டு எண்ணெயை வெளியே எடுத்து விடுங்கள்.
ஃப்ரிட்ஜில் வைக்கலாம்
மேலே சொன்ன இரண்டு டெக்னிக் உங்களுக்கு சிரமமாக இருந்தால் அதைவிட சூப்பரான ஒரு டிப்ஸ் இருக்குது. அதாவது எண்ணெய் அதிகமான உணவை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து விடுங்கள். அதன் குளிர்ச்சி காரணமாக எண்ணெய் உறைந்து போகும். அதை கரைவதற்குள் அப்படியே ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து விடலாம்.
இனி குழம்பு, கிரேவி, கூட்டில் எண்ணெய்ய் அதிகமானால் அதைக் குறித்து கவலைப்படாதீங்க. மேலே சொன்ன டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை முயற்சித்து பாருங்கள்.