எனக்கே பத்து நாள் கெடு விதிக்கிறியா! மறுநாளே செங்கோட்டையன் கதையை முடித்த இபிஎஸ்!
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதால் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பிறகு சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி ஆகிய தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். இதனால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒற்றிணைத்தால் மட்டுமே வெற்றி என்று மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூறி வருகின்றனர். இதை எடப்பாடி பழனிசாமி எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறி வருகிறார்
அப்படி ஒற்றிணைக்கும் பேச்சை எடுக்கும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வரும் நிர்வாகிகள் கட்சி மாறி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு விதித்தார்.
இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எனக்கே எச்சரிக்கையா என கொதித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ள நிலையில் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணிநேரமாக ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க மறுப்பதாகவும், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதில், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளான நம்பியூர் வடக்கும் ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி, கோபிச்செட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ், அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு, மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கே.எஸ்.மோகன் குமார் உள்ளிட்டோர் பொறுப்பில் இருந்துது நீக்கப்பட்டுள்ளார்.