MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • நான் அசரமாட்டேன்..! எடப்பாடிக்கு செக்..! செங்கோட்டையன் ஆட்டம் ஆரம்பம்..!

நான் அசரமாட்டேன்..! எடப்பாடிக்கு செக்..! செங்கோட்டையன் ஆட்டம் ஆரம்பம்..!

நாங்கள் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, கருத்து பரிமாறியது, பொதுச்செயலாளர் இடத்திலேயே யார் வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்று அன்றைக்கு தெளிவுபடுத்தி இருந்தேன்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 06 2025, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருக்கிறார்.

24
Image Credit : Asianet News

அவரோடு அவரது ஆதரவாளர்களையும் கூண்டோடு நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘‘அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதற்காக கருத்துக்களை வெளியிட்டேன். தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரிந்தவர்களை இணைக்க வலியுறுத்தினேன். அதை ஏற்றுக் கொள்ளாமல் என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். கட்சி பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியதால் வேதனை இல்லை. இதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் அதிமுக மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று நோக்கத்தோடு, தொண்டர்களுடைய உணர்வுகள், மக்களுடைய எதிர்பார்ப்பை பிரதிபலிக்கின்ற வகையில் நேற்றைய தினம் அந்த விளக்கத்தை நான் வெளிப்படையாக தெரிவித்தேன். அதற்கு இன்று கழகத்திலிருந்து என் கட்சி பொறுப்புகளை விடுவித்து இருகிறார்கள். பொதுவாக ஜனநாயகப்படி கட்சியில் இருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அப்படி விளக்கம் கேட்காமலேயே என்னை நீக்கி இருக்கிறார்கள்.

Related Articles

Related image1
செங்கோட்டையனை நீக்கிய கையோடு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்! அசராமல் எகிறி அடிக்கும் இபிஎஸ்!
34
Image Credit : Google

‘‘இன்று ஜனநாயகத்தை நாங்கள் காக்கிறோம். சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் எந்த கருத்துக்களை சொல்வதற்கும் எங்கள் இயக்கத்திலே தடை இல்லை’’ என்று பல மேடைகளில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும். என்னுடைய பணி அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பதை நோக்கி தொடரும். நேற்றைய தினம் எடுத்துச் சொன்னதைப் போல , அந்தக் கருத்தின் அடிப்படையில் தொடரும். காலம் பதில் சொல்லும்.

நாங்கள் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, கருத்து பரிமாறியது, பொதுச்செயலாளர் இடத்திலேயே யார் வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்று அன்றைக்கு தெளிவுபடுத்தி இருந்தேன். ஏறக்குறைய எட்டு மாதத்திற்கு முன்னால் இதெல்லாம் நடந்து. என்னை கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. யார் தான் இந்த கருத்தை வெளிப்படுத்துவது? தொண்டர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள், பொதுமக்களும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள். காலிலே வேண்டுமானாலும் விழுந்து இந்த இயக்கத்தில் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார்கள்.

44
Image Credit : our own

அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் ஒரு விளக்கத்தை என் போன்ற, புரட்சித் தலைவரால் இந்த இயக்கத்திலே துவங்கி என் போன்றவர்கள் அந்த கருத்துக்களை வெளிப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு நலம் என்று முறையிலே தான் அந்த கருத்தை நான் வெளியிட்டேன். அதிமுகவில் இருக்கும் சில பேர் என்னோடு தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
செங்கோட்டையன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
செங்கோட்டையனை நீக்கிய கையோடு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்! அசராமல் எகிறி அடிக்கும் இபிஎஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved