Turmeric : பல நன்மைகள் இருந்தாலும், மஞ்சள் இவங்களுக்கு மட்டும் டேஞ்சர்!!
மஞ்சள் ஆரோக்கியமானது என்றாலும், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்கவும் அவர்கள் யார் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Turmeric Side Effects
மஞ்சள் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள். இது சமையலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் சரும அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணங்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உதவினாலும் அனைவருக்கும் இது நன்மை பயக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், அது அவர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். இந்த பதிவில் யாரெல்லாம் மஞ்சள் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
கல்லீரல் நம் உடலின் ஒரு முக்கிய உறுப்பாகும். அது ஆரோக்கியமாக வைத்திருப்பது ரொம்பவே அவசியம். ஆனால் உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் சாப்பிட வேண்டாம். அதில் இருக்கும் குர்குமின் மின் உங்களுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கை விளைவிக்கும்.
சிறுநீரக கல்
உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் மஞ்சள் தவிர்ப்பது நல்லது. உண்மையில் சிறுநீரக கற்களில் கால்சியம் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மஞ்சளில் அதிக அளவு ஆக்சலேட்டும் உள்ளது. இவை இரண்டும் ஒன்று சேரும் போது உங்களது பிரச்சனையை மேலும் அதிகரிக்க கூடும்.
பித்தப்பை பிரச்சனை
மஞ்சளில் உள்ள குறுகுமின் பித்தப்பையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதாவது இது பித்தப்பையை சுருங்க செய்து, சிறுநீர்ப்பையை காலியாக்கிவிடும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவில் மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள்
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மஞ்சள் சாப்பிட கூடாது. ஏனெனில் இது ஹார்மோன் சமநிலை உண்மையை ஏற்படுத்தி விடும். மேலும் கர்ப்பப்பைக்கும் தீங்கும் விளைவிக்கும். அதே நேரத்தில் தாய் பால் கொடுப்பவர்கள் மஞ்சள் சாப்பிட்டால் அது புதிதாக பிறந்த குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
மஞ்சள் நன்மைகள் :
- வீக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
- சருமத்தை பிரகாசமாக்கும்
- செரிமானத்தை மேம்படுத்தும்
- இதயத்திற்கு நல்லது
- புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்