Teeth Care : பிரஷ் பண்ண உடனே தண்ணீர் குடிப்பீங்களா? ரொம்ப தப்பு; ஏன் தெரியுமா?
பிரஷ் பண்ண உடனே ஏன் தண்ணீர் குடிக்க கூடாது? அப்படி குடித்தால் என்ன ஆகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தினமும் காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன் நாம் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் பல் துலக்குவது. பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஏனெனில் வாய்வழி ஆரோக்கியம் தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஒருவேளை வாய்வழி ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் இதய நோய் போன்ற பிற உடல் நல பிரச்சினைகள் வருவதற்கு வழிவகுக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், எப்போது பல் துலக்கினால் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், அப்படி பிரஷ் பண்ண உடனே தண்ணீர் ஒருபோதும் குடிக்க கூடாது என்று கூறப்படுகிறது. காரணம், டூத் பேஸ்டில் இருக்கும் ஒரு மெல்லிய ஃப்ளோரைடு நம் பற்களில் குவிகிறது. இது பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி பற்களை பாதுகாக்கிறது. மேலும் பற்கள் சேதமடைவதையும் தடுக்கிறது.
நிபுணர்கள் கூற்றுப்படி, நாம் பல் துலைக்கிய பிறகு இந்த ஃப்ளோரைடு அதன் விளைவை காட்ட குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும். அப்போதுதான் அது பற்கள் மற்றும் பற்களின் எனாமலை வலுப்படுத்த முடியும். எனவே உங்களது பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பல் துலக்கிய உடனே தண்ணீர் கொடுக்காமல் சிறிது நேரம் காத்திருந்து குடிக்கவும்.
டூத் பேஸ்ட்டில் இருக்கும் இந்த ஃப்ளோரைடு பற்களை ஆரோக்கியமாக வைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பற்களை வலுப்படுத்தவும், துவாரங்கள் இல்லாமல் வைத்திருக்கவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் பண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர்.
தண்ணீர் மட்டுமல்ல டீ, காபி வேறு எந்தவொரு உணவு மற்றும் பானங்களை பிரஷ் பண்ண உடனே குடிக்கவோ சாப்பிடவோ கூடாது. இந்த பழக்கத்தை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பற்களை வலுவாகவும், எந்தவித சேதமும் இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். பல் துலக்கிய உடனே சுமார் 15 நிமிடங்கள் கழித்துதான் எதை வேண்டுமானாலும் குடிக்கலாம், சாப்பிடலாம். இதுவரை நீங்கள் பிரஷ் பண்ண உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி இருந்தால் இன்றே அதை நிறுத்துங்கள். உங்களது பற்களை ஆரோக்கியமாக பராமரிங்கள்.