Teeth Whitening : மஞ்சள் கறை பற்கள் முத்துப்போல வெண்மையாக மாறனுமா? இதை பண்ணா போதும்
பற்கள் முத்துப்போல வெண்மையாக மாற உதவும் சில இயற்கை வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Natural Teeth Whitening Remedies
ஒருவரது முகத்தின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு. அதிலும் பற்கள் கறைகள் இல்லாமல் முத்துப்போல வெண்மையாக இருந்தால் தனி அழகு தான். பற்கள் வெள்ளையாக இருந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூட இருப்பவர்களும் முகம் சுளிக்காமல் நன்றாக பேசுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சள் கறையாக இருப்பதற்கு வயது, பரம்பரை, வெற்றிலை, பான், சிகரெட் போன்றவற்றை காரணமாக இருக்கலாம். பற்களை சரியான முறையில் பராமரிப்பது மூலம் அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் பற்களை கறைகள் இல்லாமலும் இருக்கும். உங்கள் பற்களும் மஞ்சள் கறைகள் ஏதுமின்றி முத்து போல வெண்மையாக இருக்க விரும்பினால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் இப்போது காணலாம்.
கொய்யா இலைகள்
கொய்யா இலைகளை கழுவி வாயில் போட்டு நன்கு மென்று பிறகு துப்பிவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெள்ளையாகிவிடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை பற்களில் நன்கு தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி வெள்ளையாகிவிடும். கூடுதலாக ஈறுகளும் வலிமையாகும்.
ஆரஞ்சு தோல்
இரவு தூங்கும் முன் ஆரஞ்சு தோலை பற்களில் நன்கு தேய்த்து பிறகு சாதாரண தண்ணீரில் கழுவி விட வேண்டும். ஆரஞ்சு தோலில் இருக்கும் வைட்டமின் சி ஈறுகளில் பற்களில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் கறைகளை அழித்து விடும். மேலும் பற்களை வெள்ளையாகவும் வலுவாகவும் மாற்றும்.
உப்பு
உப்பை பற்களில் தேய்த்து வந்தால் கறை நீங்கிவிடும். ஆனால் உப்பை அதிகமாக பயன்படுத்தாமல் அளவோடு பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் உப்பு பற்களின் எனாமல் மற்றும் ஈறுகளை பாதிக்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை அகற்றிவிடும். அது மட்டுமல்லாமல் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்கும்.
குறிப்பு : சாக்லேட், இனிப்பு போன்ற எதை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுங்கள். குழந்தைகளையும் அவ்வாறே சொல்லி வளர்க்கவும். அப்போதுதான் பற்களின் நிறம் மாறாமல் வெண்மை நிறத்தில் ஆரோக்கியமாக இருக்கும்.