இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:28 AM (IST) Dec 05
மாருதி சுசுகி தனது அரேனா ஷோரூம் மாடல்களுக்கு 2025 டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. புதிய கார் வாங்க அல்லது பழைய காரை மாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
09:18 AM (IST) Dec 05
வீடு கட்ட சரியான மனையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். மனையின் விலை, உள்கட்டமைப்பு வசதிகள், சாலை அகலம், வடிவம், மற்றும் சுடுகாடு போன்ற பாதகமான இடங்களுக்கு அருகில் இல்லாமல் இருப்பது போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
08:57 AM (IST) Dec 05
இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. எப்படி டிக்கெட் பெறுவது என்பதற்கான மூன்று தீர்வுகளையும், ஆன்லைன் முன்பதிவுக்கான ஆதார் இணைப்பு விதியையும் ரயில்வே அறிவித்துள்ளது.
08:52 AM (IST) Dec 05
பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. டிசம்பரில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உட்பட 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
08:47 AM (IST) Dec 05
எம்ஜிஆர் மறைவுக்கு பி்ன்னர் அதிமுகவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அக்கட்சியை 4 முறை அரியணையில் ஏற்றிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
08:40 AM (IST) Dec 05
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை விஜயா கடத்திய விஷயம் அண்ணாமலைக்கு தெரிய வந்த நிலையில், அவர் செம டோஸ் கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:40 AM (IST) Dec 05
விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து DGCA இண்டிகோவுடன் ஆய்வு நடத்தியது. பணியாளர் திட்டமிடல் தோல்வி மற்றும் FDTL விதிமுறை சிக்கல்களால் தினமும் 170-200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது.