- Home
- Astrology
- Kumba Rasi Palan Dec 06: கும்ப ராசி நேயர்களே, இன்று நடக்கும் அனைத்துமே நல்லதாக நடக்கும்.!
Kumba Rasi Palan Dec 06: கும்ப ராசி நேயர்களே, இன்று நடக்கும் அனைத்துமே நல்லதாக நடக்கும்.!
Dec 06 Kumba Rasi Palan: டிசம்பர் 06, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 06, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் ஒருவித உற்சாகமும், தைரியமும் மேலோங்கும். புதிய விஷயங்களில் துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பீர்கள்.
நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியங்கள், புதிய முயற்சிகள் தொடங்கும். கடந்த கால சிக்கல்கள் மறைந்து புதிய தெளிவான பாதை தெரியும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்று மேம்படும். கடின உழைப்பின் பலனாக பணவரவு கிடைக்கும். சமூக மற்றும் குடும்ப நிகழ்வுகள் காரணமாக செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள் தெளிவான திட்டமிடல் அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவில் நேர்மறையாகவும், வெளிப்படையாகவும் பேச வேண்டியது அவசியம். சச்சரவுகள் நீங்கி உறவுகள் ஆழமடையும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கலாம்.
பரிகாரங்கள்:
விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது பல வழிகளில் நன்மை தரும் துர்க்கை அம்மனை வழிபடுவது ராகு கேது தோஷங்களை நீக்க உதவும். ஆதரவற்றவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது நேர்மறை பலன்களை கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

