MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரப்போகுது.!

மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரப்போகுது.!

Sukra Peyarchi Palangal 2026 : மார்ச் 3, 2026 சுக்கிர பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இது சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாகும். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் அமோக பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 06 2026, 05:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சுக்கிர பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

சுக்கிர பெயர்ச்சி 2026

ஜோதிடத்தின் படி 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் சில ராசிகளில் அமரும்பொழுது அவை தனது முழு திறனை வெளிப்படுத்தும். அந்த ராசிகள் கிரகங்கள் உச்சம் பெரும் ராசிகள் என்று அறியப்படுகிறது. அந்த வகையில் சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். மார்ச் 3 அவர் மீன ராசிக்கு பெயர்ச்சியாகி இருப்பதால், சில ராசிகர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

தனது உச்ச ராசியான மீன ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் பொழுது மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இது மீன ராசியில் உருவாவதால் மீன ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கலாம். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள். தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுப காரியங்கள் கைகூடும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். புதிய வாகனங்கள் அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

Related Articles

Related image1
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026 பலன்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? ஏற்றமும், ராஜயோகமும் பெறப்போகும் ராசிகள் யார்?
Related image2
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
36
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் உச்சம் பெறுவது ரிஷப ராசிக்கு பெரும் நன்மைகளைத் தரும். எதிர்பாராத வழிகளின் மூலம் பணம் கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை பெரிய அளவிற்கு விரிவாக்கம் செய்வீர்கள்.

46
மிதுனம்
Image Credit : AI Generated

மிதுனம்

மிதுன ராசியின் பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். இது தொழில் மற்றும் வேலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சினிமா, இசை, ஓவியம் போன்ற கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயர் புகழ் அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

56
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

கன்னி ராசியின் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். இது உறவுகளில் இனிமையை சேர்க்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். வணிகத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். உயர் கல்வி அல்லது வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். இதன் மூலம் லாபகரமான வழிகள் திறக்கும்.

66
விருச்சிகம்
Image Credit : AI Generated

விருச்சிகம்

விருச்சிக ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர இருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் திருமண உறவில் நுழைவீர்கள். தங்கம், வெள்ளி, பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் எதிர்பாராத லாபங்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூரியன் சந்திரன் சேர்க்கையால் வியாதிபாத யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image2
சனியுடன் பயணத்தைத் தொடங்கிய சுக்கிரன்.! 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ராஜயோகம்.! பொன், பொருள் குவியும்.!
Recommended image3
Sani Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பித்த சனி பகவான்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கையே தடம் புரளப்போகுது.!
Related Stories
Recommended image1
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026 பலன்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? ஏற்றமும், ராஜயோகமும் பெறப்போகும் ராசிகள் யார்?
Recommended image2
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved