- Home
- Astrology
- நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
நட்சத்திரத்தை மாற்றும் கேது.! 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது.! பணம் குவியும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!
Ketu Transit 2026 : கேது பகவான் விரைவில் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கேது பெயர்ச்சி 2026
ஒன்பது கிரகங்களில் கேது முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாக அறியப்படுகின்றன. இவை பொதுவாக பின்னோக்கி நிலையிலேயே நகர்ந்து வருகின்றன. ராகு மற்றும் கேதுவின் நிலையில் ஏற்படும் மாற்றம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏப்ரல் 20 மாலை 4:49 மணிக்கு கேது பகவான் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது ஜோதிடத்தில் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கேது மகம் நட்சத்திரப் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கேது பகவான் அசுப கிரகமாக அறியப்படுகிறார். இருப்பினும் அவரது பெயர்ச்சியானது கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களையும், மன மாற்றத்தையும் தூண்டுவதாக அமையும். மேலும் மக நட்சத்திரத்தை ஆளும் கிரகம் கேது என்பதால் இந்த பெயர்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர மாற்றம் மகத்தான நன்மைகளை தர இருக்கிறது. கேது பகவானின் அருளால் வாழ்வில் புதிய உச்சங்களை அடைவீர்கள். நிதி நிலைமை கணிசமாக உயரும். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்து வந்த பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். பணியிடத்தில் உங்களை தொந்தரவு செய்து வந்த அதிகாரிகள் விலகுவார்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி, பணம் உங்கள் கைக்கு வரும். புதிய வாகனங்கள், சொத்துக்கள், வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
கேதுவின் நட்சத்திரமாற்றத்தால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த கிரக மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். வருமானம் உயர்வதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உபரி வருமானம் பெறுவதற்கான வழிகள் திறக்கும். தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும்.
கேதுவின் ஆசியால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகும். ஏற்கனவே செய்த முதலீடுகள் தற்போது லாபத்தை கொடுக்கத் தொடங்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இழந்த செல்வாக்கும், அமைதியும் மீண்டும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர மாற்றம் ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொண்டுவரும். இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடிவுக்கு வரும். புதிய ஆற்றல் மற்றும் உற்சாகம் பிறக்கும். வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் வேகம் எடுக்கும். ஆரோக்கியம் சிறக்கும். தீய எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள் விலகும். எதிரிகள் தாமாக விலகிச் செல்வார்கள். குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். அனைத்து பிரச்சனைகளும் எளிதில் முடிவடையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

